பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+5 பொருள்படுகின்றதேயொழிய பிறந்தபோது வைத்த பெயராகக் காணப்படவில்லை. - - (3) கோவூர்கிழார் கோவூர் என்பது அவர் பிறந்த ஊராகும் அல்லது அவர் வசித்துக்கொண்டிருந்த ஊர் ஆகும். கிழார் என்பது வேளாளர்களுக்குள் பழைய காலத்தில் வழங்கப்பட்ட பட்டப் பெய ராகும். அவருடைய சொந்தப் பெயர் தெரியவில்லை. (1) தொல்காப்பியர் தொல்காப்பிய நூலாசிரியர் இவர். தொல்+காப்பியம்=பழைய காவ்யம் என்பதாம். இந்நூலே இயற்றிய வருக்கு தொல்காப்பியர் எனும் பெயர் சிறப்புப் பெயராக வந்ததாகத் தோன்றுகிறது. இவரது தாய் தந்தையர் இவர் பிறந்தவுடன் இவருக்கு இப்பெயர் வைத்ததாக எண்ணுவது உசிதமன்று. தொல்காப்பியக்குடி என்று ஊரோ, குலமோ, இருந்ததாக சிலர் கூறுகின்றனர். இதனின் றும் தொல்காப்பியக்குடியிற் பிறந்தவர் தொல்காப்பியர் என்று சிலர் கூறுகின்றனர்; இதைவிட தொல்காப்பிய நூலாசிரியர் உதித்த இடமோ, குலமோ, அவரது சிறப்பினால், அப்பெயர்பெற்றது என்று எண்ணுவது சிறிது மேலானதுஎன்று எண்ணத்தக்கதாயிருக்கிறது. (5) மதுரைக் கூலவாணிகன் சாத்தனர் மதுரையில் பிறந்த அல்லது வாழ்ந்த, கூலம் = நெல் முதலிய எண்வகைத் தானியம் வியாபாரம் செய்யும் சாத்தனர் என்று பொருள்படுமே யொழிய அவரது இயற்கை பெயராகாது. (6) இளங்கோவடிகள் என்பது, அரசருக்குப்பின் பிறந்த இளையவராகிய சமண சன்யாசி என்று பொருள்படும். இவர் சன்யாசம் வாங்கிக் கொண்ட பிறகு இப்பெயர் வந்திருக்கவேண்டும். பூர்வ ஆசிர த்துப் பெயரல்ல, - . . 鞭 (புத்தகந்தி, பவணந்தி, திருத்தக்கதேவர், கேமிநாதர் முதலிய பெயர்கள் புத்த சமணர்களுடைய பெயர்களாகும்.) (7) சம்பந்தர் இவரது முழுப் பெயர் திருஞான சம்பந்தர் என் பதாம். திரு+ஞானம் + சம்பந்தம். சம்பந்தர் என்பது சமஸ்கிருத மொழியினின்றும் வந்ததாம். சம்பந்தர் இதை நோக்கு மிடத்து இது இவரது இயற்கை பெயராகத் தோன்றவில்லை; சிறப்புப்