பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 பெயராகத் தோன்றுகிறது. இவருக்குப் பிள்ளையார் என்றும், ஆளு டைய பிள்ளையார் என்றும் பெயர் உண்டு. (8) திருநாவுக்கரசு இப்பெயர் இவருக்குச் சிறப்புப் பெய ராகும். இவரது இயற்கை பெயர் மருணிக்கியார் என்பதாம் மருள்டி நீக்கியார் மருளைநீக்கினவர் என்பது பொருளாம், இவர் சமண மதத் தைச் சார்ந்தபொழுது இவருக்கு தருமசேனர் என்று சமணர் பெயர் வைத்தார். தற்காலமும் ஒரு மதத்தைவிட்டு மற்ருெரு மதத்தைச் சாரும் ஒருவனுக்கு புதுப் பெயர் கொடுக்கப்படுவதை கவனிக்க. (9) சுந்தரர் இவருக்கு இவரது பெற்றேர்கள் இட்ட பெயர் நம்பி ஆரூரர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆரூர் என்பது திருவாரு ராம்; நம்பி என்பது ஆடவரின் சிரேஷ்டன் என்று பொருள்படும். இவ் ரது முழுப் பெயர் ஆலால சுந்தரர் என்று இருப்பதால் இவரது இயற்கை பெயர் சுந்தரர் என்பதுதான் இருக்கலாமெனத் தோன்று கிறது. . (10) மாணிக்கவாசகர் இப்பெயர் சிறப்புப் பெயரென தமிழ்ப் புலவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். இவரது பிள்ளைத் திருநாமம் வாதவூரர் என்று சிலர் கூறுவர். இதுவும் காரணப் பெயராகத்தான் காணப்படுகிறது. இவர் பிறந்த இடம் வாதவூர் என்ப தாயின் இவரை வாதவூரர் என்று காரணப் பெயராக அழைத்திருக்க வேண்டும். இவருக்கு அரசன் தென்னவன் பிரமராயன் என்றும் பட்டப் பெயர் கொடுத்ததாக அறிகிருேம். ஆகவே அக்காலத்திலும் அரசர்கள் பெரியோர்களுக்குப் பட்டப் பெயர்கள் வழங்கும் வழக்கம் உண்டென் பதைக் இதல்ை அறிகிருேம். . . இடைக்காலத்து தமிழர்களின் பெயர்கள் . . . . இனி இடைக் காலத்து தமிழ் அறிஞர்களுடைய பெயர்களுள் சில வற்றை ஆராய்வோம். . . . - (1) கவி சக்ரவர்த்தி யாகிய கம்பர். இவர் இயற்பெயர் கம்பர் என்பதுதான என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இவர் பிறந்த சாதியினின்றும் இவருக்கு இப் பெயர் வந்திருக்கலாம் என சிலர் ஊகிக் கின்றனர் கம்பங் கொல்லேயை இள வயதில் இவர் காத்தபடியால்