பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 (19) பொதுவாள்-பொது+ஆள். மலயாளத்தில் ஒர் ஜாதி யார் பெயர், - - மேற்கண்ட பூர்வீக ஜாதிப்பெயர்களேக் கவனிக்குங்களில், தமிழ் நாட்டில் ஆதியில், பிராம்மண, கூத்திரிய, வைசிய, சூத்திரர்கள் எனும் பிரிவுகள் இல்லை யென்பது ஸ்பஷ்டமாகும். பெரும்பாலும் பூர்வீக ஜாதிப் பெயர்களெல்லாம் ஜனங்கள் வசித்த கிலத்தைப் பொறுத்ததர்கக் காணப்படுகிறது. இப்பெயர்களெல்லாம் பெரும்பா லும் சுத்த தமிழ் மொழிகளாயிருப்பதைக் காண்க. - - ஆரிய ஜாதிப் பெயர்கள் ஆரியர் தென்னுட்டிற்கு வந்தபின் ஆரியப் பிரிவுகளாகிய பிரா மண, கூத்திரியர், வைஸ்யர்,சூத்திரர்கள் எனும் பிரிவுகள் இங்கு வழங் கலாயிற்று. இவைகளெல்லாம் சமஸ்கிருத பதங்கள் என்பது கவனிக் கத்தக்கது. ' கால்வகைச் சாதி இந்நாட்டினில் நீர் நாட்டினீர் ' என் பதைக் காண்க. - தற்காலத்து ஜாதிப் பெயர்கள் (1) ஐயர்-ஐயங்கார் பஞ்ச திராவிட பிராமணர்கள்ான தமிழ்ப் பிராமணர்களைப் பற்றி மாத்திரம் நாம் கருதுவோம், அவர் களுள் ஸ்மார்த்தர்களும் சைவர்களும் ஐயர் எனும் பட்டப் பெயர் கொள்கின்றனர். வைஷ்ணவர்கள் ஐயங்கார் அல்லது ஆசாரியார் என்று பெயர் கொள்ளுகின்றனர். ஐயர் என்பது ஆரியர் எனும் பதத் தின் சிதைவம்; அய்யங்காருமப்படியே, ஆர் எனும் விகுதியேற்ற தாம் ஆர்யர் என்ருல் உயர்ந்தோர் பூஜ்யர் என்று பொருள்படும். ஆசாரியர் என்பது குரு எனும் அர்த்தம் கொடுக்கும் சமஸ்கிருத பத மாம். பிராமணர்கள் மற்றவர்களுக்கு குரு ஸ்தானத்திலிருந்தபடியால் இப்பெயர் வந்தது. ஆச்சாரி என்ற பட்டம் தச்சர், கம்மாளர்களுக்கும் பட்டப்பெயராக வழங்கப்பட்டு உள்ளது. (2) ராவ் என்பது ராகுத்தன் எனும் வட மொழியின் திரிபாம். ராகுத்தன் என்ருல் குதிரை வீரன் என்று பொருள்படும். இது சாதா ரணமாக மஹாராஷ்டிர பிராம்மணர்களுடைய பெயராயிருந்தது. அவர்