பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 கள் தஞ்சையில் ஆள ஆரம்பித்த காலமுதல் அவர்களுக்கு சாதாரண பட்டப் பெயராயிற்று. (3) முதலியார் முதலி எனும் மொழி ஆர் விகுதியைப் பெற்று முதலியார் என்ருயது ஆர் என்பது பன்மையைக் குறிப்பதாயினும் மரி யாதையின் பொருட்டு ஒருவருக்கு உபயோகிக்கப்பட்டிருக்கிறது. முதலி என்ருல் முதன்மையானவன் என்ரும். இது பிராம்மணர்கள் உட்பட பல ஜாதியார்களுக்கு ஆதி காலத்தில் உபயோகிக்கப்பட்டதாக அறிகிருேம். முற்காலத்தில் இது அரசர்களால் கொடுக்கப்பட்ட பட் டப் பெயராயிருந்தது, ஜெயினர்களுட் சிலருக்கும் இப்பெயர் வழங்கிய தாக எட்கர் தர்ஸ்டன் துரை (Edgar Thurston) கூறியிருக்கிருர். ஆயினும் வேளாளர்களே இடைக்காலத்தும் தற்காலத்தும் இதைத் தமது பட்டப் பெயராக உபயோகித்திருக்கின்றனர். வேளாளர்களுள் சேஜனத் தலைவர்களாக இருந்தவர்களே இடைக் காலத்தில் இப் பட்டப் பெயர் வகித்திருந்தனர்; மதுரை நாய்க்கமார் காலத்தில் இருந்த ஆரியநாயக முதலி என்பவரின் பெயரைக் காண்க. முதலியார் எனும் பெயர் தற்காலம் தொண்டைமண்டலத்தில்தான் அதிகமாய் வழங்கப் படுகிறது. இதற்குக் காரணம் ஆதொண்டைச் சக்கரவர்த்தி துளுவ வேளாளர்களைச் சைனியமாகக் கொண்டு இங்கு வந்து நாட்டை ஜெயித்து அதில் அவர்களைக் குடியேற்றியபொழுது, தன் சேனத் தலைவர்களுக்கு முதலி, முதலியார் என்று பெயர் கொடுத்திருக்கவேண் டும் என்று தோன்றுகிறது. அனபாய சோழன் சேக்கிழார்க்கு முதலி எனும் பட்டம் வழங்கியதை கவனிக்க திருநெல்வேலி, மதுரை ஜில் லாக்களில் இன்னும் தளவாய் முதலியார் வமிசத்தார் இருக்கின்றனர். தளம்+வாய்-தளவாய் என்றயது. சைனியத்தின் முன்பாகம் என்று பொருள்படும்; யுத்தங்களில் முன் அணியில் நின்று சைனியங்கள் நடத் தியவர்களுக்கு இப்பட்டப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். பிற்காலம் இவர்களது சந்ததியார்களெல்லாம், இப்பட்டப் பெயரை தமது ஜாதிப் பெயராக உபயோகித்திருக்க வேண்டும். செம்படவர் களுள் அவர்கள் தலைவருக்கு முதலி என்கிற பட்டப் பெயர் வழங் கப்படுகிறது; அச்சாதியாருக்குள் முற்பட்டவன், முதலி தலைவன் என் கிற பொருளில் உபயோகிக்கப்பட்டதாம். (4) பிள்ளை என்பது தமிழர்களுக்குள் மிகவும் புராதனமாக வழங்கிய பெயராம். பிள்ளையார் என்றும் ஆளுடைய பிள்ளையார் என்