பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 றும் திருஞான சம்பந்த ஸ்வாமிகளுக்கு பெயர் வழங்கியிருந்ததைக் காண்க. திருவெண்காட்டடிகளுக்கு பட்டினத்துப் பிள்ளையார் என்று பெயர் இருந்ததைக் கவனிக்க. தற்காலத்தில் இப்பெயர் பெரும்பாலும் வேளாளர்களுக்குள்ளே வழங்கப்பட்டு வருகிறது மதுரை திருநெல் வேலி முதலிய ஜில்லாக்களில். ஆதி காலத்தில் தென் இந்திய பிராம்ம ணர்களெல்லாம் பிள்ளை என்கிற பட்டப் பெயரையே உபயோகித்தனி ரென்றும், பிறகு வேளாளர்கள் பிள்ளை என்கிற பெயரைக் கொண்ட தன்மேல், பிராம்மணர், ஐயன், ஐயர் என்கிற பெயரைப் பூண்டனர் என்றும் எட்கர் தர்ஸ்டன் துரை அபிப்பிராயப்படுகிருர். மலையாள தேசத்து நாயர்களும் பிள்ளை என்கிற பட்டப் பெயரை உபயோகிப்ப தைக் கவனிக்க. ராமன் பிள்ளை, மாதவ பிள்ளை என்பதைக் காண்க. வன்னியர்களும், தமிழ்நாட்டில் பிள்ளை என்கிற பட்டம் வகிக்கின்ற னர். ஆதியில் ஒருவன் இன்னுருடைய பிள்ளை என்றும் வழக்கத்தி லிருந்து இப்பெயர் உண்டாயிருக்கலாம். * - " - (5) நாயகர் என்பதும் முதலியார் என்பதைப்போல் ஆதியில் அரசரால் வழங்கப்பட்ட, பட்டப் பெயராயிருந்து பிறகு ஜாதிப் பெய. ராக மாறியதாகும். நாயகன் என்ருல் சம்ஸ்கிருதத்தில் தலைவன் என்று பொருள்படும்; கதாநாயகன் என்பதைக் காண்க. இப் பெயர் பெரும் பாலும், விஜயநகர அரசர்கள், தமிழ்நாட்டை ஜெயித்த காலத்திற்குப் பிறகுதான் அதிகமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது; திருமலை நாயகர், சொக்கநாத நாயகர் என்கிற பெயர்களைக் காண்க. நாயகர் என்பது சேனைத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பட்டப் பெயராகும்; பிறகு அவர்களது வம்சத்தார்களெல்லாம் நாயகர் பெயரையே உபயோகிக்க ஆரம்பித்தனர்போலும் நாய்க்கர் என்பது நாயகர் என்னும் மொழியின் திரிபாம். தற்காலம் வன்னியர் முதலிய ஜாதியர்களும் இப்பெயரைப் பூண்பதைக் காண்க. மலையாளத்திலுள்ள சூத்திரர்களுக்குப் பெய. ராகிய நாயர் என்பதும் நாயகர் என்பதின் மருவேயாம். நாயர் ஜாதி யார் ஆதிகாலத்தில் படை வீரர்களாயிருந்தது கவனிக்கத்தக்கது. தெலுங்கில் நாயுடு என்னும் பதமும் இதன் மருவேயாம். (6) கைக்கோளாகையில்ை தொழில் செய்பவர், நெசவுத் தொழில் செய்பவர் என்று பொருள்படும். கைக்கோல் என்கிற பதம் நெசவுத் தொழிலில் உபயோகப்படும் ஒரு மரத் துண்டின் பெயராம் 4