பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என் தந்தை-தாயார்
ப. விஜயரங்க முதலியார்

ப, மாணிக்கவேலு அம்மாள்

ஞாபகார்த்தமாக இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ் அன்னை
பிறந்து வளர்ந்த கதை

-

2-ம் பாகம்
தமிழர்கள் பூர்வீக நாகரீகத்தை அறிவிக்கும் சொற்கள்

பாக்கம் என்பது பக்கம் என்னும் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேணும். சிறிய ஊரின் பக்கத்திலுள்ள இடம் என்றும்;உதாரணமாக புரை சைபாக்கம்,காவிரிப்பாக்கம்,நுங்கம்பாக்கம்,காட்டுப்பாக்கம் முதலியவற்றைக் காண்க.

பள்ளி என்பது பள்ளத்தாக்கிலுள்ள சிற்றுார் என்று சிலர் அபிப் பிராயப்படுகின்றனர் ; உதாரணமாக, காட்டுப்பள்ளி, செம்பொன் பள்ளி, திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி,முதலியவற்றைக் கூறலாம் : இதே பதம் தெலுங்கில் பல்லே என்று மாறியிருக்கிறது. கன்னடத்தில் ஹல்லி என்றாயது. -

பேடு என்பது சிறிய ஊர் என்று சொல்லப்பட்டிருக்கிறது அமரம்பேடு, சூளும்பேடு முதலியவற்றைக் காண்க. - பேட்டை என்பது பேடு என்பதினின்றும் பிறந்திருக்கலாம். உதாரணமாக சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சேத்துப்பேட்டை தண்டையார்பேட்டை முதலியவற்றைக் காண்க. ஆதிகாலத்தில் இழி குலத்தவர் வசித்த இடங்களுக்கு இப்பெயர் கொடுக்கப்பட் டிருக்கலாம். - -