பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 களுள் சிலருக்கு சோனகர் என்றும் பெயர் உண்டு : சோனகம் என் பது அரபிய தேசத்திற்கு ஒர் பூர்வீகப் பெயராம். இவர்களுள் இன்னும் சிலருக்கு காயலார் என்கிற பெயர் உண்டு. காயல் என்ருல் கழி, கழிமுகம் என்று பொருள் படும். சமுத்திரக் கரையோரம், சமுத்திர ஜலம் சில இடங்களில் தங்கியிருந்தால் அதற்குக் காயல் என்று பெயர். காயல் பட்டனம் என்பதைக் காண்க. காயல்களில் வசிக்கும் ஜனங் களுக்ரு காயலார் என்று பெயராம். - (30) துலுக்கர் இது சாதாரணமாக தமிழ் நாட்டில் மகம்மதியர் களைக் குறிக்கும் சொல்லாம். இம்மொழி துர்க் (Turk) என்பதினின் றும் வந்ததாகும். மகம்மதியர் தமிழ் நாட்டின்மீது படையெடுத்த போது அவர்களது தலைவர்களெல்லாம் பெரும்பாலும் துலுக்கர்களா யிருந்தனர் ; அதனின்றும் மகம்மதியர்களுக்கெல்லாம் துலுக்கர் அல் லது துருக்கர் என்று பெயர் வழங்கலாயிற்று. (31) மேஸ்திரி இது கொல்லர் முதலிய ஜாதியாருக்குள் பட் டப் பெயராக வழங்குகிறது. கொல்லத்து மேஸ்திரி என்பதைக் காண்க. முக்கியமாய் கொல்லன் என்று பொருள்படும். இம்மொழி போர்த்துகேய பாஷையிலுள்ள மெயிஸ்டர் (Maester) என்னும் பதத்தின் மருவாம் கைத்தொழிலில் கை தேர்ந்தவனுக்குக் கொடுக் கும் பட்டப் பெயராம் தையக்கார மேஸ்திரி, உப்பரவ மேஸ்திரி என்பதைக் காண்க. (33) தட்டான். பொன் வெள்ளியைத் தட்டுபவன் என்பதா யிருக்கலாம். - (34) கொல்லத்துக்காரன்-கொல்லற்றுக்காரன், கொல்லறு என்னும் ஆயுதத்தை உபயோகிப்பவனும். (35) தச்சர்-தrர் என்னும் சமஸ்கிருத மொழியின் சிதைவாம். - (36) ஈழவர் பூர்வகாலத்தில் ஈழ நாடு அல்லது சிங்களத்தி லிருந்து வந்தமையால் இவர்களுக்கு இப்பெயர் வந்ததாம். சிங்களம் என்பது சிலோன், இலங்கைத் தீவாம். -