பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 (15) எண்ணெய் எனும்பதம் எள் +நெய் எண்ணெய் என் பதாம் எள்ளினின்றும் எடுக்கப்பட்ட நெய் அல்லது சாரம் என்று பொருள்படும். பிறகு இந்த அர்த்தத்தை மறந்தவர்களாகி தமிழர் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், மண்ணெண்ணெய், பாதுமை எண்ணெய் என்று வழங்கலாயினர். (16) எசமானன் இப்பதம் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. இதன் பூர்வீக அர்த்தம் யாகம் செய்பவன் யாகத்தலைவன் என்பதாம். தமிழ் பாஷையில் இது நுழைந்த பிறகு, இதை மறந்தவர்களாய் பொதுவாகத் தலைவன் என்கிற பொருளில் உபயோகப்பட்டுவருகிறது. (17) தளிச்சேரி என்பது ஒர் பூர்வீக தமிழ்ப் பதமாம். தளி என்ருல் கோயில். (ஒணகாந்தளி என்பதைக் காண்க) தளிச் சேரி என்ருல் கோயிலைச்சார்ந்த இடம் என்று பொருள்படும். ஆயினும் நாளாவட்டத்தில் கோயிலுக்கருகில் தேவதாசிகள் வசிக்குமிடம் சாதா. ரணமாயிருப்பதால், தளிச்சேரி என்ருல் விலைமாதர் வசிக்குமிடத்தைக் குறிப்பதாயது. சிறப்புக் காரணப் பெயர்கள் இங்கு நாம் சிறப்புக் காரணப்பெயர்கள் எனும் மொழிகளைக் கவ விக்க வேண்டியவர்களாயிருக்கிருேம். சிறப்புக் காரணப்பெயர் என் னும் ஒரு மொழி பலவற்றைக் குறிப்பதாயினும் சிறப்புக் காரணத் தால், ஒன்றையோ ஒருவரையோ குறிப்பதாம், உதாரணங்களாக : ' வரதன் என்ருல் வரத்தைக் கொடுப்பவன் என்று பொருளாம் இப்பெயர் மஹாவிஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவில் உப யோகிக்கலாம், வரத்தைக் கொடுக்கும் எந்த தெய்வத்திற்கும் உபயோ கிக்கலாம்; தேவாரத்தில் நமச்சிவாயத் திருப்பதிகத்தில் ' வரதநாம 'நமச்சிவாயவே ” என்றிருப்பதைக காண்க. ஆயினும் தற்கால வழக் கத்தில் வரதன் என்ருல் விஷ்ணுவின் பெயராகவே கொள்ளப்படு கிறது, - தோகை என்ருல் வால் என்று அர்த்தம். வாலையுடைய அநேக பட்சிகள் இருக்க, அழகிய வாலேயுடைய மயிலுக்கே இப்பெயர் உரித்ததானது சிறப்புக் காரணம் பற்றியேயாம். . . .