பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3? பாஷையாதலால், இதற்கு இப்பெயர் வந்தது என்று கூறுவர். தேன்-- மொழி. தமிழ் என்றயது என்பாருமுளர். சிங்களத்தில் எழுதப்பட்ட மஹாவம்ஸோ (Mahavamso) என்னும் பரிபாஷை நூலில் தமிள்ளோ (Dammio) என்று இப்பாஷையைக் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு பல அறிஞர் பலவிதமாய்க் கூறியிருப்பதில் இதுதான் நிச்சயமான கொள்கை எனக் கூறுவது கஷ்டமாயிருக்கிறது. இது இன்னும் ஆராய்ந்து அறிய வேண்டிய விஷயம். (1) அரவம் இது தமிழ் பாஷைக்கு மற்ருெரு பெயர். இம் மொழி தெலுங்கர் இப்பாஷைக்கு வைத்த பெயராம். இதற்குக் காரணம் தெலுங்கு பாஷை பேசப்படும் தேசத்திற்கு அருகாமையி லிருந்த பூர்வீக தமிழ் பாஷை பேசப்பட்ட நாடாகிய அருவாநாடு அல் லது அரவநாடு என்னும் பதத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவகாட்டிலுள்ளார் பேசும் பாஷைக்கு அரவபாஷை என்று பெயர் வந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். (3) எழுத்து எழுது என்னும் சொல்லிலிருந்து வந்ததாம்; எழுதப்படுவது என்று பொருள்படும். பழைய நூலாகிய தொல்காப் பியத்தில் எழுத்ததிகாரம் என்னும் பிரிவு இருப்பதைக் காண்க. அக் காலத்தில் தமிழ் பாஷை எழுதப்பட்ட பாஷையா யிருந்ததென்பற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றுண்டுகளுக்கு முன் னர் எகிப்து முதலிய தேசங்களுடன் வர்த்தகம் செய்த தமிழர்கள் அங்கிருந்த ஓர் வகை லிபியைக் கற்று, தமிழ் நாட்டில் அதைப் பரவச் செய்தனர் என்றும், சமஸ்கிருதமானது. அதன் பிறகே எழுத ஆரம் பிக்கப்பட்ட தென்றும் சில சாஸ்திரஅறிஞர் எண்ணுகின்றன்ர். டாக்டர் பர்னல் (Dr. Burnell) என்பவரும் இம்மாதிரியாகவே எண்ணுகின் றனர். வட இந்தியாவில் வழங்கும் லட் (Lut) எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களினின்றும் பிறந்தவை என்று எட்வர்ட் தாமஸ் (Edward Thomas) என்பவர் நினைக்கின்ருர், ஆகவே ஆரியக் கலப்பு உண்டாவதற்கு முன்னேயே தமிழர்கள் எழுத்துக்களை எழு தும் முறையை அறிந்திருந்தார் என்று நாம் நிச்சயிக்க இடமுண்டு. எழுத்து என்பது சுத்த தமிழ் மொழியாம். சமஸ்கிருதத்திலிருந்து வந்ததன்று. சமஸ்கிருத எழுத்துகள் தேவநாகரி, கிரந்தம் என்று இருவகைப்பட்டன. தேவநாகரி என்பது நாகஜாதியாரிடமிருந்து கற்ற தென்றும், பூர்வீகத் தமிழர்களுக்கு நாகர் என்று ஒருபெயர் இருந்த