பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 தென்றும், பாஷா தத்துவ சாஸ்திரிகளில் (Philogists) சிலர் கூறு கின்றனர். நாகர்களிடமிருந்து ஆரியர்கள் எழுத்துக்களைக் கற்றனர் என்று தமிழ் வித்வான் கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் எண்ணுகின் ருர். நாகர் என்பவர் ஓர் திராவிட ஜாதியேயாம். கிரந்தம் என்ருல் புஸ்தகம் என்று பொருள்படும். கிரந்த எழுத்துக்கள் பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களினின்று வந்தன என்று பழய எழுத்தாராய்ச்சி sfē5ï (Epigraphists) Gn-gyásirgi. ஆகவே சமஸ்கிருத பாஷையும் தனது எழுத்துக்கள். தமிழி னின்றும் ஓர் வகையில் கொண்டது என எண்ண இடமுண்டு, (4) ஓலை என்பதற்கு புஸ்தகம் என்று ஒரு பொருள் உண்டு. அன்றியும் பன முதலிய மரங்களின் இதழ்களுக்கும் இப்பெயர் உண்டு. இதல்ை ஆதிகாலத்தில் தமிழ் புத்தகங்களும் கடிதங்களும் ஒலைகளில் எழுதப்பட்டன வென்று அறிகிருேம். ஒலைகளை துண்டுக ளாக வெட்டி அவற்றின்மீது கூருகச் செய்யப்பட்ட ஆணிகளால் (எழுத்தாணிகளால்) தமிழ் மொழிகளை நமது பூர்வீகர் வரைந்தனர். ஆகவே ஒலே என்ருல் புஸ்தகம் என்று அர்த்தமாயது. இதற்கு மற் ருெருபதம் சுவடி என்பதாம், சுவடி என்பது சுவடு என்னும் பதத்தி னின்றும் பிறந்ததாம். சுவடு என்ருல் பதித்தலால் உண்டாகும் குறி என்ரும் நூல் என்றும் புஸ்தகத்திற்கு ஒரு பழம் பெயர்உளது. (புஸ்த கம் என்பது சமஸ்கிருத மொழியாம்)பழைய ஓலைச் சுவடிகளை நூலில் கோர்த்துக் கட்டி வைக்கும் வழக்கத்திலிருந்து ஆகுபெயராக நூல் என்பது புஸ்தகத்திற்கும் பெயராயது. (6) வாசல் புது வாயில் என்னும் பூர்வீக தமிழ் பதத்தின் மரு வாம். வாய்+இல்= வாயில் என்ருயது, இல்லத்தின் (வீட்டின்)வாய், வாயில் என்ருயது; கடைப்புறம் புறம் கடை என்ருயது போல. வீட் டிற்கு, உட்புகவும், வெளிவரவும் மார்க்கமாதலால் வீட்டின்வாய் அல் லது வாயில் என்ருயது. அன்றியும் பூர்வீக தமிழர்களது வீடுகளைக் கட்டும் முறைப்படி வீட்டில் ஒவ்வொரு கட்டிற்கும், ஒவ்வொரு வாயில் இருக்க வேண்டுமென்று விதித்திருப்பதைக் கவனிக்க. (7) பலகணி என்ருல் சன்னல். சன்னல் என்பது போர்த்து கேய பாஷையிலிருந்து வந்ததால் இதற்குப் பழய தமிழ்மொழி பலகணி என்பது; பல-கண்ணி=பலகண்களையுடையது என்று பொருள்