பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 ரத்திற்கு ஜோடுதவலே என்று பெயர். சாதாரணமாக தவலையின் பக் கத்தில் எப்பொழுதும் வைக்கப்பட்டிருப்பதால், தவலையின் ஜோடு, தவலையுடன் இருப்பது, தவலையைப் பிரியாதிருப்பது, எனும் அர்த் தத்தில் ஜோடுதவலை எனும் சொற்ருெடர் வழங்கலாயிற்று. (19) சொம்பு தற்காலத்தில் இம்மொழி எந்த லோகத்தின லும் செய்யப்பட்ட சிறு பாத்திரத்தைக் குறிப்பதாயிருக்கிறது. வெள் ளிச் சொம்பு, பித்தளைக் சொம்பு, வெண்கலச் சொம்பு என்பவற்றைக் காண்க. ஆதி காலத்தில் தமிழகத்தில் பாத்திரங்களெல்லாம் செம்பி ல்ை செய்யப் பட்டமையால், அதனின்றும் சொம்பு என்ற பெயர் பாத் திரங்களுக்கு உபயோகிக்கப்பட்டது. செம்பு-சொம்பாயது என்னலாம். (24) பழம், பழுத்தது. சாதாரணமாகத் தமிழர் ஒரு காரியம், காயா, பழமா ? என்றுங் கூறுகிற வழக்கமுண்டு. பலிதமாயதா, வியர்த்தமாயதா? அதாவது பலன் (பழம்) கொடுத்ததா ? பிரயோ ஜனமின்றிப் போயதா ? என்னும் அர்த்தத்தில் உபயோகப்படுத்து கிருர்கள். இப்படியிருக்க பழுத்தது அல்லது பழுத்துப் போயிற்று என்ருல் பிரயோஜனமற்றதாயது என்னும் அர்த்தத்தில் எப்படி வழங்க லாயிற்று, இந்த அர்த்தத்தில் பழுத்தது என்கிற மொழி, பழம் என் கிற பதத்திலிருந்து வந்ததல்ல; பழுத்தது என்ருல் இச்சந்தர்ப்பத்தில் பழுப்பு நிறமடைந்தது. என்று சில பொருளில் உபயோகிக்கப்பட் டிருக்கிறது என்று கொண்டால் அர்த்தம் சரியாக வெளியாகும்; அதா வது நெற் பபிரோ, அல்லது பச்சை நிறமாயிருக்கும் எந்த பயிரோ, திடீரென்று பழுப்பு நிறம் அடைந்துவிட்டால் (சாவியாகப் போய்விட் டால்) பிறகு பலன் தராது, இந்த அர்த்தத்தில் காரியம் பழுத்துப் போயிற்று என்ருல் கிஷ்பிரயோஜனமாகிவிட்டது என்று அர்த்தம் கொடுக்கும். . - (28) தாலி இது சுத்தத் தமிழ் மொழியாம்; மங்கல்யம் என் பது வட சொல், அச்சொல் மங்களகரமானது என்று பொருள்படும்; மாங்கல்ய சூத்திரம் என்று தாலிக்கு பெயராகச் சொல்லப்பட்டிருக் கிறது; அதாவது மங்களகரமான கயிறு என்பதாம், பிராம்மணர்கள் முதலிய ஆரியர்களுடைய விவாகத்தில் தாலி கட்டுகிறதைப் பற்றி வேத வாக்கியம் ஒன்றும் கிடையாது; கிருஹ்ய சூத்திரங்களிலும் கிடையாது ஆகவே தாலி கட்டுதல் பூர்வீக தமிழர்களுக்குரிய வழக்