பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அல்லது போக்கிரி, துஷ்டன் என்கிற அர்த்தத்தில் உபயோகிக்கப் பட்டதாம். - (35) வாசாங்கள்ளி: இது வாசாங்கள்ளி என்கிற சொற்ருெட ரின் திரிபாம். அதாவது வாசாவில்=வார்த்தையில், கள்ளத்தனம் செய்கிறவள். அல்லது வார்த்தையை மாற்றிப் பேசுகிறவள் வார்த் தையில் திருட்டுத்தனம் செய்கிறவள் என்று பொருள்படும். (36) கிரஹசாரம்: இது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாம். கிரஹம்-சாரம்; அதாவது கிரஹத்தின் பலன்; இங்கு கிரஹம் என் ருல் சூர்ய சந்திரர்கள் முதலான நவக்கிரஹங்களைக் குறிப்பதாம். இதற்கு பூர்வீக தமிழ் பெயர் கோள் என்பதாம். “ கோளறு திருப்பதி கம் ' என்னும் திருஞான சம்பந்த ஸ்வாமிகள் பாடிய பாடலைக் காண்க. சூரியன் செல்லும் ஆகாய வீதியை பன்னிரண்டாக வகுத்து, அவைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கிரஹம் அல்லது வீடு என்று அழைக்கின்றனர் வானசாஸ்திர அறிஞர். தற்காலமும் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிருன் ? என்று ஜாதகம் கணிக்கும்போது கவனிப் பதை நோக்குக. இந்த கிரஹங்களில் சஞ்சரிப்பதினுல் அங்காரகன், பிரஹஸ்பதி முதலிய நட்சத்திரங்களுக்கு கிரஹங்கள் என்று பெயர் வழங்கலாயிற்று: நவக்கிரஹங்கள் என்பதைக் கவனிக்க. நமது ஜோதிவு சாஸ்திரப் பிரகாரம் இந்த கிரஹங்களெல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை தீமையைப் பயப்பதாகக் கருதப்படுகிறபடி யால் கிரஹசாரம் என்ருல் கிரஹத்தின் பலன் என்னும் அர்த்தத்தில் வழங்கலாயிற்று. இச்சந்தர்ப்பத்தில் கிரஹசாரம் என்றும் சாதாரண மாகக் கெட்ட அர்த்தத்திலேயே உபயோகிக்கப்படுகிறதைக் கவனிக்கவும். (37) ஈரொட்டு: இப்பதம் சாதாரணத்தில் ஈரெட்டு என்று வழங்கப்படுகிறது. தமிழ் அகராதியில் இப்பதத்தை இரண்டு ஒட்டு என்று பிரித்திருக்கிறது; இரண்டில் ஒன்று என்று பொருள்படும்; ஆகவே நிச்சயமின்மையைக் குறிப்பதாம். ஈரெட்டாகச் சொன்னுன் என்ருல் இரண்டில் ஒன்ருகச் சொன்னன்; நிச்சயமாகச் கூருமல் சந் தேகமாய்ச் சொன்னன் என்று அர்த்தம் தரும். ஒரு பொருளை ஈரெட் டாக வாங்கிக்கொண்டு போனன் என்ருல், முடிவாக வாங்கிக்கொண்டு போகவில்லை, வாங்கிக் கொண்டாலும் வாங்கிக் கொள்வான், திருப்பிக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவான் என்கிற பொருளைத் தருவதாம்.