பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது3

சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். பட்டி என்பது சித்துரைக் குறிக்கும். பட்டி என்பதற்கு-ஆட்டுக்கிடை மாட்டுக் கொட்டில் எனும் அர்த்தங்களுண்டு. ஆகவே சிறிய ஊரைக் குறிப்பதாம். மதுரை திரு நெல்வேலி ஜில்லாக்களில் அநேகம் ஊர்களுக்கு இப்பெயர் உண்டு. கோவில்பட்டி, அக்கரைப்பட்டி, ஆண்டிப்பட்டி, சந்திரப்பட்டி, கனக் கன்பட்டி முதலியவற்றைப் பார்க்க.


ஊர்-புரம். ஊர் என்பது தமிழ் மொழியாம், டாலமி (Ptolemy) என்னும் மேகாட்டு ஆசிரியர் தென் இந்தியாவில் மாத்திரம் 23 ஊர் என்று முடியும் பட்டணங்களின் பெயர்களேக் குறிப்பிட்டிருக்கிருர் புரம், புரி என்பவை சமஸ்கிருத பதங்களாம், உதாரணமாக பாடலிபுரம், புஷ்பபுரம், புருஷபுரம், ஹஸ்தினபுரம், லட்சுமண புரம் என்பவற் றைக் காண்க. வடமொழிக்காரர் தமிழ் நாட்டிற்கு வந்த பிறகு தமிழ் ஊர்களுக்கு புரம் அல்லது புரி என்பதைச் சேர்த்து வழங்கலாயினர். உதாரணமாக காஞ்சீபுரம், மதுராபுரி, விறிஞ்சிபுரம், காகலாபுரம் முத லியவற்றைக் காண்க. புரம் என்கிற மொழி ஆரியர்களால், ஆரியர்க ளல்லாதாருடைய காவலமைத்த ஊர்களுக்குப் பெயராக உபயோகப் பட்டதென சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.


கோட்டம்-நாடு-கத்தம் தொண்டமண்டலமானது. குறும்பர் காலத்தில் 64 கோட்டங்களாகப் பிரித்திருந்ததாகத் தெரிகிறது. கோட்டம் என்பது காவலமைத்த இடம். பாசறை என்பதாம். மதிற் சுவரையுடையது என்றும் பொருந்தும். சிலப்பதிகாரத்தில் கோட்டம் என்பது கோயில் என்னும் பொருளில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கோயிற் சேவற்கொடியோன் கோட்டமும் என்பதைக் காண்க. கோயில்களெல்லாம் ஆதிகாலத்தில் தற்காலத்திலிருப்பது போலவே மதிற்கூவர்களே யுடைத்தாயிருந்தன வென்பதற்கு ஐயமிற்று. ஒவ் வொரு கோட்டமும், அதனைச் சார்ந்த பூமியும், நாடுகளாகப் பூர்வீகத் தில் பிரிக்கப்பட்டது. காடு என்பது கடு என்னும் மொழியினின்றும் உற்பத்தியானதாக சிலர் எண்ணுகின்றனர். தொண்டைமண்டலம் 79 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பூவிருந்தமல்லி நாடு, பொன்னேt நாடு முதலியவற்றைக் காண்க. நாட்டார் என்பது தற்காலம் வேளான வகுப்பிற் வழங்கும் பதம், நாடுகளின் தலைவர் என்று பொருள்படும். நாட்டாமை = நாட்டாண்மை = நாடு-ஆண்மை= நாட்டுத் தலைமை என்பதாம். ஒவ்வொரு நாட்டிலும் தத்தங்கள் இருந்தன.தொண்டை மண்டலத்தில் 999 நத்தங்களிருந்ததாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.