பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 படுமாகையால், அப்படிக்கில்லாதபடி, ஒரே அளவைக் குறிக்கும்வண் ணம், அவ்வரசர்கள் காலத்தில் முகத்தலளவைக் கருவிகள் ஏற்படுத் தப்பட்டு, அவைகள் கோயில்களில் சாதாரணமாக வைக்கப்பட்டிருந் தன; அவைகளைக் கொண்டு கோயில வரும்படி தானியங்களையும், ராஜாங்க வசூல் தானியங்களையும் அளக்கும் வழக்கம் இருந்தது. (49) அடி, சாண், முழம், அங்குலம் என்னும் நீட்டலளவு பதங்கள் நமது தேசத்திலுள்ள அவயவங்களினின்றும் பிறந்தவை என்று சுலபமாய்ப் புலப்படும். (50) கூவொலி என்பது ஒர் பூர்வீக தமிழ் மொழியாம். கூப் பிடு தூரம் என்பது தற்காலம் வழங்கும் மொழி. ஒருவன் உரத்தக் கூவில்ை எவ்வளவு தூரம் கேட்குமோ அவ்வளவு தூரம் என்று பொருள்படும். . (51) காணிக்கை. அரசர் முதலிய பெரியோர்களைக் காணும் பொழுது ஒருவன் சமர்ப்பிக்கும் பொருளுக்கு காணிக்கை என்று பெயராயது போலும். (52) அமுது என்பது அமிர்தம் எனும் சமஸ்கிருத பதத்தின் திரிபாம். பிறகு உணவு எனும் பொதுப் பெயராக உபயோகிக்கப்பட்ட தாம். திருக்கண்ண மது என்பது திரு+கண்ணன் (கிருஷ்ணன்)-- அமுது என்பதாம். அமுது பொடி என்பது அரிசி என்று வழங்க லாயிற்று. (53) பச்சடி என்பது தமிழர்கள் சாதாரணமாக வழங்கும் ஓர் பதமாம் இது பச்சையென்னும் மொழியினின்றும் வந்தது என்பதற்குத் தடையில்லை. பச்சை அதாவது பசுமை நிறமுடையது. வேக வைக்கா தது என்று பொருள்படும். வேக வைத்தால் பதார்த்தங்களின் நிறம் கொஞ்சம் மாறுமன்ருே! ஆகவே பச்சடி என்பது எந்த பதார்த்தத்தை யாவது அடுப்பில் வேக வைத்துச் சித்தம் செய்யாததாம். தற்காலத்து மேட்ைடு சுகாதார சாஸ்திர நூல்களில், நமது தேக ஆரோக்கியத்திற்கு தினம் ஏதாவது பச்சை நிறமமைந்த காய்கறிகளை, அப்படியே, தீயில் வாட்டாது புசித்தல் நலமென்று கூறுகின்றனரல்லவா ? இந்த உண் மையை நமது முன்னேர்கள் முன்பே அறிந்திருந்தனர் என்பதற்கு அவர்கள் உண்ட பச்சடிகளே சான்ருகும். - - -