பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 (54) நீச்சத் தண்ணீர். இது கிராமாந்தரங்களில் சூத்திரர்கள் சாதாரணமாக காலையில் அருந்துவதாம். இதன் சரியான பதம் கிசித் தண்ணீர் என்பதாம். நிசி என்ருல் இரவு. முன்னுள் இரவு சோற்றுடன் கலந்துவைக்கப்பட்ட தண்ணீர் என்று புலப்படும். (55) குப்பன். இப்பெயர் தமிழ்நாட்டில் சாதாரணமாக எல்லா ஜாதியார்களுக்கும் பெயராக உபயோகப்படுகிறது; குப்பையர், குப்ப னையங்கார், குப்பாசாரி, குப்பு ராவ், குப்புசாமி முதலியார், குப்புசாமி நாயுடு, குப்புசாமி பிள்ளை என்பவற்றைக் காண்க: அன்றியும் பெண் பாலார்க்கும் சாதாரணமாக குப்பம்மாள் எனும் பெயர் பல ஜாதிகளில் உண்டு. இப்பெயர் எப்படி வழங்கலாயிற்று என்று விசாரிப்பது வேடிக்கையாயிருக்கும். இப்பெயர் குப்பை எனும் பதத்தினின்றும் பிறந்ததென்பதற்குச் சந்தேகமில்லை. தமிழ்நாட்டில் ஒர் பூர்வீக வழக்க மென்னவென்றல், ஒரு தம்பதிகளுக்கு, பல குழந்தைகள் பிறந்து இறந்துபோனல், பிறகு பிறக்கும் குழந்தையை குப்பையில் எறிந்து விடுவதுபோல் எறிந்துவிட்டு, பிறகு அதையெடுத்து குப்பையர், குப்பு சாமி, குப்பம்மாள் என்று பெயர் வைப்பதாம். இப்படிச் செய்வதில்ை அந்த தோஷம் நீங்கி நெடு நாள் ஜீவித்திருக்கும் என்பது அவர்கள் கொள்கை. - . (56) அம்பட்டன். பரியாரி. அம்பட்டன் என்பது அம்பஷ் டன் எனும் சமஸ்கிருதத்தின் மருவாம். இது சாதாரணமாக சென்னைக் கருகில் உள்ளவரால்தான் உபயோகிக்கப்படுகிறது. மதுரை, தஞ்சா வூர், திருநெல்வேலி முதலிய பிராந்தங்களில் பரியாரி எனும் பதம் தான் உபயோகத்திலிருக்கிறது. பரியளி என்பது பரிஹாரி என்பதின் மருவுபோலும். நோய்க்கு பரிஹாரம் செய்பவன், அல்லது வயித்தி யன் எனப் பொருள்படும். அம்பட்டர்கள் தற்காலமும் சாதாரணமாக வைத்தியர்களாயிருப்பதைக் கவனிக்க. அம்பட்டத்தி என்ருல் பிரசவ காலத்தில் வயித்தியம் செய்பவளுக்குத் தற்காலப் பெயராம். . (57) கேப்மாறி. இது கேப் அல்லது காப் (Cap) என்னும் ஆங்கில பதத்தினின்றும் பிறந்ததாம். காப் என்ருல் குல்லாய், குல் லாயை மாற்றுகிறவன், அதாவது அயோக்கியன். மோசக்காரன் என்று பொருள்படும். ' தலைப்பா மாற்றி ' என்கிற இதைப் போன்ற சொற்ருெடரையும் கவனிக்க. இச்சந்தர்ப்பத்தில் நாம் கவ னிக்கவேண்டியது இன்னென்றுண்டு. காப், டொப்பி ஆங்கில பதங்