பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


sä பன் காலத்தில் புஷ்பகம் முதலிய ஆகாய விமானங்களை அறிந்திருந் தது உண்மையாயின், மணிமேகலை காலத்தில், தமிழர்கள் ஆகாயத் தேர்களை ஏன் அறிந்திருக்கலாகாது எனும் கேள்வி நாம் கேட்கக் கூடும். (88) சிவிளி என்ருல் நீரை வீசும் கருவியாம். தற்காலத்தில் நீரைத் தெருக்களில் தெளிப்பதற்காக யந்திரங்கள் இருப்பதுபோல் பழைய காலத்திலும் தமிழ்நாட்டில் இருந்திருக்க வேண்டும். (89) கரந்து வரல் எழினி-பொருமுக வெழினி. எழினி என்ருல் பூர்வீகத்தில் திரைக்குப் பெயராம். கரந்துவரல் எழினி என் ருல் மேலே மறைந்து, கீழே இறங்கும் திரைக்குப் பெயராம்: பொரு முக வெழினி என்ருல் திரை இரண்டாகப் பிரிந்து மறுபடியும் விழும் போது எதிர்த்து சந்திக்கும் திரையாம். பூர்வ காலத்தில் மூவகைத் திரைகள் தமிழ் நாடகங்களில் உபயோகப்பட்டதாக அறிகிருேம். இதைக் கொண்டு அக்காலத்தில் தமிழ் நாடகங்கள் எவ்வளவு சீர் திருத்தம் உடையனவாயிருந்தன வென்பதை ஊகிக்கலாம். சமஸ் கிருத நாடகங்களில் நேபத்தியத்தில் ஒரே திரை குறிக்கப்பட்டிருப்ப தைக் கவனிக்க, (90) திங்கள் என்ருல் சந்திரன் என்று அர்த்தம். திங்கட் கிழமை சந்திரனுடைய கிழமையாம். திங்கள் என்ருல் மாசம் என்றும் பொருள்படும். தொல்காப்பியத்தில் திங்கள் என்ருல் மாசம் என்கிற அர்த்தத்திலேயே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பண்டைக் காலத்தில் தமிழர்கள் சாத்திர மாசத்தையே கணித்தனர் என்று கூற லாம். ஐயிரண்டு திங்கள் ' என்று திருவெண்காட்டடிகள் கூறியிருப் பதையும் காண்க. தற்காலமும் ஸ்திரீகள் பிரசவ காலத்தை 10 மாதம் என்று வழங்குவது சாந்திர மாசக் கணக்கைப் பொறுத்ததாகும். திங்கட் காசு என்று மாதம்தோறும் தண்டப்படும் ஓர் பூர்வீக வரிக் கும் பெயராகும். - (91) வீராக்கல். இதற்குப் பொருள் கல்லில் வீரனுடைய பெயரும் பெருமையும் எழுதி அல்லது பொறித்து நட்டக் கல்லாம். இது தமிழகத்தில் மிகவும் பூர்வீகமான ஓர் வழக்கத்தை குறிப்பதாம். பூர்வ காலத்தில் ஒருவன் யுத்தத்திலோ, அல்லது தன் அரசனுயிரினர் காப்பதிலோ, பெரும் வீரச் செய்கை செய்து, தன் உயிரை விட்டவன ஒயின், அவன் பெயரும் வீரச் செயலும் மழுங்காதிருக்கும் வண்ணம்,