பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அவனப்போன்ற உருவத்தை சிலையில் பொறித்து, அதில் அவன் பெயரையும் பொறித்து வைத்தல் வழக்கமாம். பொறித்தல் என்றல் கல்லில் செதுக்கிவைத்தல் என்று பொருள்படும். - (92) சாலேஸ்வரம். இது சாலீஸ் எனும் வடச் சொல்லி லிருந்து பிறந்தது. சாலிஸ் என்ருல் ஹிந்துஸ்தானியில் 40 என்று அர்த்தம். 40 ஆம் வயதில் மனிதர்களுக்கு கண்களில் உண்டாம் ஓர் நோய், - (93) மண்சேய் என்று செவ்வாய்க்குப் பெயர். மண்=பூமி, சேய்,= புத்திரன். பூமியினின்றும் ஒரு துண்டம் செவ்வாய் எனும் கிரகமானது என்று சில வான சாஸ்திரிகள் தற்காலம் கூறுகின்றனர்: இந்த சூட்சுமம் தமிழர்க்கு முன்பே தெரிந்திருந்தது போலும். ஒரு பாஷை பேசப்படும் நாட்டில், சில பகுதிகளில் மாத் திரம் அப்பாஷையைச் சார்ந்த சில மொழிகள் உபயோகப்படு கின்றன. இதற்கு ஆங்கிலத்தில் புரோவின்ஷலிஸம் (Provincialism) என்று பெயர். சென்னை ராஜதானியில் தற்காலம் தமிழ் வழங்கும் ஜில் லாக்கள் செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல் வேலி, கோயமுத்தூர், தென் ஆற்காடு, சிற்றுளின் சில பாகம், வட ஆற்காட்டின் சிறிது பாகமாம்; இலங்கையில் யாழ்ப்பாணத்தை இத னுடன் சேர்க்கவேண்டும். இவற்றுள் சுத்தமான தமிழ் பேசுமிடங்கள் மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், ராமநாதபுரமாம், தஞ்சாவூர், கோயமுத்துர், ஆற்காடு முதலிய இடங்களில் பேசப்படும் தமிழ் கொஞ்சம் கலப்படமாயிருக்கும். சுத்தமாயிராது: செங்கல்பட்டு, சித் தூர், வட ஆற்காடு, சென்னபட்டணம், முதலிய இடங்களில் பேசப் படும் தமிழ் எல்லாவற்றிற்கும் கீழ்ப்பட்டதாம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் நாம் மொத்தமாகக் கூறுமிடத்து தெற்கத்திய தமிழ் வடக் கத்திய தமிழைவிட சுத்தமானது என்பதற்குச் சந்தேகமில்லை. சில ஜில்லாக்களில் மாத்திரம் உபயோகப்படும் சில தமிழ் மொழிகளைக் கருதுவோம். . - - மதுரை திருநெல்வேலி யாழ்ப்பாணம் அங்கிட்டு-அங்கே நாட்சோறு=மணவிருந்து திரும்ப-மறுப்பு . . . . . . . . . மாடி=மெத்தை -