பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 (3) சென்னேயில் வழங்கும் மொழிகள். தீக்குச்சி போலீஸ்காரன் (பழையதீக்குச்சிகள் தலையில் சிகப்பான கந்தகமுடைய வைகளாயிருந்ததால் போலீஸ்காரர் கள் சிகப்புதலே அணி அணிவதில்ை) சரம் பெண்பால் (பொது மகள்) புலன்அறிதல் துப்பறிதல் - - - - - தேட்டைபோடல் அடித்தல் மட்டம்போடுதல் பள்ளிக்குப் போகாதிருத்தல் சில தமிழ் மொழிகளும் அவைகளின் தாதுக்களும் தாது என்பது சமஸ்கிருத மொழி, ஆங்கிலத்தில் இதை ருட்' என்பர். ஒரு பதத்தினின்று மற்றென்று பிறந்ததாயின், ஆதி பதத் திற்கு ரூட் அல்லது தாது என்று பெயராம். - (1) வெள்ளி வெள் அல்லது வெண்மையிலிருந்து பிறந்த தாம் வெளிச்சம். வெள்ளி (நட்சத்திரம்) வெளுத்தல் என்னும் மொழி களைக் காண்க. * . . . (2) இடம் ஓடு என்பதினின்றும் பிறந்ததாம். அதாவது கடலின் மீது ஒடுவதாம். திரைகடலோடியும் திரவியம் தேடு, என்பதைக் காண்க. - . . . (3) மீன் என்பது மின் என்பதினின்றும் வந்ததாம். மின் என் ல் வெளிச்சம் என்று பொருள்படும். மின்னல், விண்மீன் எனப் படுகிற மொழிகளைக் காண்க. ". . . . . (4) குதிரை இது குதி எனும் தாதுவிலிருந்து பிறந்ததாக எண்ணப்படுகிறது. குதித்தோடும் மிருகம் குதிரையாம். (5) செம்பு செம் அல்லது செம்மை என்பதினின்றும் பிறந்த தாம். அதாவது செம்மை நிறமுடையது என்று பொருள்படும். (6) கிழங்கு கீழ் எனும் மொழியினின்றும் பிறந்ததாம். பூமி யின் கீழிருந்து தோண்டி எடுக்கப்படுவது கிழங்காம். .