பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அனல் அனலா கடுகு கடுகா (5) பிரெஞ்சு பாஷை, ஆயா எனும் தமிழ் மொழி இப்பாஷை யில் புகுந்திருக்கிறது. ஆயா என்ருல் அப்பாஷையில் (போர்த்துகேய பாஷையினுமப்படியே) வேலைக்காரி என்று பொருள்படும். இவர்கள் இந்தியாவிற்கு முதலில் வந்தபொழுது அவர்களுக்கு வேலைக்காரி களாக, முது வயதுடைய தமிழ் மாதர்கள் அமர்ந்தபடியால் ஆயா என்ருல் வேலைக்காரி எனும் அர்த்தத்தில் வழங்கப்பட்டது. தற்கால மும் ஒரு ஆங்கிலேய வீட்டில் 18 வயதுடைய தமிழ்ப் பெண் வேலை செய்தாலும் அவளுக்கு ஆயா என்றுதான் பெயர். (6) இங்கிலீஷ் பாஷையில் அநேகம் தமிழ் பதங்கள் நுழைந்துள்ளன. - : ・ ・ 、 உதாரணமாக: தமிழ் இங்கிலீஷ் தேக்கு Tecak இஞ்சி Ginger கொப்பரை Copra கட்டு மரம் Catamaram மிளகு தண்ணீர் Mulgatany சுருட்டு Cheroot பந்தல் . Pandal கறி Curry கூலி Cooly இச்சந்தர்ப்பத்தில் பெலுசிஸ்தானி (Baluchistan)áò elstảgih சில ஜாதியாரும், உதகமண்டலம் (Ootacamund) Grgyib Su-šić, வசிக்கும் தோடர்களும், ராஜமகாலில் வசிக்கும் சாந்தாளர்களும், அநேகம் தமிழ் மொழிகளே உபயோகிப்பதைக் கவனிக்கவும், இவ்வாராய்ச்சிப் பகுதியில் இன்னுெரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இரண்டு பாஷைகளில் ஒரே ரூபத்தையுடைய மொழிகள் வழங்கப்பட்டால், ஒன்று முதல் பாஷையிலிருந்து இரண்டா வது பாஷைக்கு அவை போயிருக்கலாம். அல்லது இரண்டாவது பாஷையிலிருந்து முதல் பாஷைக்கு அவை போயிருக்கலாம்: அல்லது இவ்விரண்டு பாஷைகளுக்கும் தாய் பாஷையாகிய மூன்ற