பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

 தற்காலமும் இப்பட்டினம் இப்பெயர் உடைத்தாயிருக்கிறது. இவ் வூருக்குக் காகத்தி என்னும் மற்ருெரு பெயர் பூர்வகாலத்தில் வழங்கி வந்தது. அப்பெயர்கொண்ட அரசர்கள் இங்கு ஆண்டமை யால் அப்பெயர் வழங்கலாயிற்று என்று அறிகிருேம்,


(2) சோபட்டினம் இது பழைய ஊர்களிலொன்று. இதைப் பெரிப்ளஸ் (Periplus) என்பதை வரைந்த ஆசிரியர் சோபட்மா (Sopatma) என்று அழைத்திருக்கிருர், பட்டினம் என்னும் பதம் அரண் அமைந்த ஊர்களுக்கு முன் காலத்தில் உபயோகப்பட்டதாக காலஞ்சென்ற தமிழ் அறிஞர் கே. கனகசபை பிள்ளை அவர்கள் அபிப் பிராயப்பட்டிருக்கிறர். சிறுபாணுற்றுப்படைகள் இதை எயில்பட்டினம் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. எயில் என்ருல் மதில் என்று பொருள்படும்.


(3) மயிலாப்பூர் இதற்கு முற்காலத்தில் மயிலை என்றே பெயர் வழங்கி வந்தது. தேவாரத் திருத்தொண்டர் தொகையில் பொன் மயிலை' என்று கூறப்பட்டிருப்பதால் இது ஒரு மிகவும் புராதன மான ஊர் என்பதற்கு சந்தேகமின்று. மயில் என்னும் பதத்தினின் றும் இப்பெயர் வந்திருக்க வேண்டுமென்று சாதாரணமாக எண்ணப் படுகிறது. சில பழைய நூல்களில் இதை மயிலார்ப்பூர் என்று கூறப் பட்டிருக்கிறது; மயில்கள் சப்திக்குமிடம் என்று ஒருவாறு பொருள் கூறலாம். தேவாரத்தில் இதற்கு மயிலாப்பு என்று பெயர் கூறப்பட் டிருக்கிறது. இதையொட்டி உமாதேவியார் மயில் வடிவமாக சிவ பிரா னைப் பூசித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறதைக் காண்க. திராவிட பாஷையின் ஒரு பிரிவென மதிக்கப்பட்ட காண்டி (Gondi) எனும், மத்திம மாகாணத்தில் பேசப்பட்ட ஒர் பாஷையில், மால்பூர் என்று அங்கு ஒரு பட்டணத்திற்கு பெயர் உளது: மால் என்ருல் அப்பாஷை யில் மயில் என்று அர்த்தமாம்: மயில் என்னும் பதமே அப்பாஷையில் மால் என மருவியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. மயிலை என்ருல் ஒர்வகை மல்லிகை, அதனின்றும் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர் சிலர்.


(4) திருவொற்றியூர் இதுவும் புராதனமான தமிழ்காட்டி லுள்ள ஊர். திருக்ஷேத்திரக் கோவையில் ' கடலொற்றியூர் ' எனக் கூறப்பட்டிருக்கிறது. இங்குள்ள கோயில் கல்வெட்டொன்றில் இதற்கு ஆதிபுரியென்று பெயர் இருந்ததாக அறிகிருேம்; ஆகவே இதுவும் மிக வும் பழைய ஊராம. இதையாண்ட ஒர் அரசன் இதை ஒற்றி (குதுவை)