பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69 அப்பதங்களை அவைகளின் உச்சரிப்புடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்; இன்னும் சிலர் அவைகளுக்குத் தக்க தமிழ் மொழிகளைக் கண்டுபிடித்து, மொழி பெயர்த்து ஏற்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனது அபிப்பிராயம், சுலபமான தமிழ் மொழிக்களால் அவைகளை மொழி பெயர்க்கக் கூடுமாயின் அவ்வாறு செய்தல் உசிதம் , அங்ங்ணமில்லா மொழிகளை யெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளல் நலம் என்பதாம். சுலபமாய் மொழி பெயர்க்கப்பட்டு, வழக்கத்திற்கு வந்த சில மொழிகளுக்கு உதாரணமாக :- х r ஆங்கிலம் தமிழ் Gunpowder வெடிமருந்து Baloon புகைக்கூண்டு Steamer புகைக்கப்பல் Aeroplane ஆகாயவிமானம் Electricity மின்சாரம் Telegram தக்தி . சில ஆங்கில பதங்கள் மொழி பெயர்க்கப்படாது, அப்படியே தமிழில் வழக்கத்துக்கு வந்துவிட்டன. இவைகளுக்கு நாம் மிகவும் கஷ்டப்பட்டுத் தமிழ் மொழி பெயர்ப்புகளைக் கூறலாம். ஆயினும் அவ்வாறு சொல்வது உசிதமன்று என்பது என் அபிப்பிராயம் : அப்படிச் செய்தாலும், சாதாரண தமிழர்கள் தற்கால வழக்கச் சொற் களையே உபயோகிப்பார்களே யொழிய, கஷ்டப்பட்டு மொழி பெயர்த்த பதங்களை உபயோகிக்க மாட்டார்கள் என்பது என் அபிப் பிராயம் : இவற்றிற்கு உதாரணமாக. - - இங்கிலீஷ் தமிழ் Cigarette சிகரெட் Varnish வார்னிஸ் Circus சர்க்கஸ் Funnel புனல் Cycle சைகில் Cricket கிரிகெட் மேற்கண்ட உதாரணங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஆராய்வோம். Funnel என்பது ஆங்கில பதம், அதைத் தமிழில்