பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 புனல் என்று நமது ஸ்திரிகளும் உபயோகிக்கின்றனர்; இதற்கு " ஒடுக்கமான வாயுள்ள, திரவப்பொருளை ஊற்றும் கருவி " என்று மொழி பெயர்க்கலாம்; ஆயினும் புனல் என்று சொல்வதை விட்டு அம்மொழிபெயர்ப்பை எத்தனை பெயர் கையாளுவார்கள் தமிழ் உலகில் : தமிழில் மொழி பெயர்ப்பதற்குக் கஷ்டமான மொழிகள் இவைகள் அப்படியே உபயோகிப்படுமேயொழிய இவைகளின் மொழிபெயர்ப்புகள் வழக்கத்திற்கு வரமாட்டா என்பது என் அபிப் பிராயம் ; உதாரணமாக :- - ஆங்கில பதம் தமிழ் Radium ரேடியம் Radio ரேடியோ Sacharine சாக்ரைன் Insulin இன்சுலின் Tram டிராம் * Motor மோட்டார் (வண்டி) Coach கோச்சு வண்டி Phaeton பீடன் வண்டி ஆகவே சாதாரணமாக சாஸ்திர சம்பந்தமான புதிய ஆங்கில மொழிகள் அப்படியே உபயோகித்தல் நலமெனத் தோன்றுகிறது. ஆயினும் நமது கலாசாலைகளில் உயர்தரக் கல்வி பயிலும் மாண வர்கள், மேற்கத்திய விஞ்ஞான சாஸ்திர புஸ்தகங்கள் ஆங்கிலத்தில் படிப்பதைவிட்டு. தமிழில் அவைகளைப் படிக்குங் காலம் வந்தால்தான் இப்பொழுது வழங்கி வரும் எல்லா சாஸ்திர ஆங்கில மொழிகளுக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வழக்கத்திற்கு வரலாகும் என்று தோன்று கிறது. இதுவரையில் என் சிற்றறிவின் ஆராய்ச்சிக் குட்பட்ட பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இன்னும், தமிழ் மொழிகளில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அநேகம் விஷயங்கள் இருககின்றன. அவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்து தமிழ் அறிஞர்கள் நமது பாஷையின் அபிவிருத்திக்காக தமிழ் உலகத்திற்கு அளிக்க வேண்டு மென இறைவன் இன்னருளை பிரார்த்திக்கிறேன். - - ப, சம்பந்தம். முற்றிற் று. -