பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


யாக வைத்தபடியால் ஒற்றியூர் எனப் பெயர் பெற்றதாக, சிலர் அபிப் பிராயப்படுகின்றனர். மற்றும் சிலர் இங்கும் கடலானது ஒற்றிப்போன படியால் கடல் ஒற்றியூர் எனப் பெயர் வந்ததெனக் கூறுகின்றனர்.


(5) மஹாபலிபுரம் இது தற்காலத்திய பெயராம்; முற்காலத் தில் இதற்கு மல்லை என்று பெயர் இருந்தது. வைஷ்ணவ ஆழ்வார்கள் இதைக் கடற் மல்லை என்று அழைத்திருக்கின்றனர்; கடற்கரையிலுள்ள மல்லை என்பதாம். மல்லர் எனும் பல்லவ அரசர்கள் இங்கு ஆண் டமையால் இதற்கு மல்லபுரம் என்று பெயர் வந்திருக்க வேண்டும் என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இச்சாதியார் நசித் துப் போகவே அப்பெயரின் அர்த்தமும் மறந்துபோகப்பட்டது, பிறகு இங்கு கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ள திருவிக்ரமாவதாரத்தில், மஹாபலி சக்ரவர்த்தியின் சிலையுருவத்தைக் கொண்டு மஹாபலிபுரம் என்று இதற்கு பெயர் வழங்கலாயினர். மஹாபலி சக்ரவர்த்திக்கும் இவ் வூருக்கும் கொஞ்சமேனும் சம்பந்தமில்லை; இங்குள்ள பல பூர்வீக கல்வெட்டுகளில் மாமல்லபுரம் (மஹாமல்லனுடையபுரம்) என்று கூறப்பட்டிருக்கிறதேயொழிய மஹாபலிபுரம் என்று கூறப்படவில்லை. பூர்வீக தமிழ் மொழியின் அர்த்தம் தவருகப் புதுப்பெயர் பெற்ற ஊர் களிலிது ஒன்ரும்.


(6) தஞ்சாவூர் தற்காலத்தில் தஞ்சாவூர் என்று சாதாரண மாக வழங்கப்படும் இவ்வூர் சுமார் 1000 ஆண்டுகளுக்குமுன் அர சாண்ட ஒர் சோழ அரசல்ை உண்டாக்கப்பட்டதாம். அவன் ஓர் ராஜ ராஜேஸ்வரம் எனும் ஒர் சிவாலயத்தைக் கட்ட அக்கோயிலைச் சுற்றி உண்டாக்கிற ஊருககு ராஜ ராஜேஸ்வரம் என்று பெயராயிற்று. கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பாவில் இதற்கு தஞ்சை ராஜ ராஜேஸ்வரம் என்றே கூறப்பட்டிருக்கிறது. திருநாவுக்கரசு நாயஞர் திருக்ஷேத்திரக் கோவையில் கூறியிருக்கும் தஞ்சையென்பது மற் ருெரு பட்டணமாம்.


(7) பழமுதிர்சோலை என்பது தற்காலம் அழகர் கோயில் என்று வழங்கும் ஊர் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். அங்ங்ன மாயின் ஆதிகாலத்தில் அது சுப்பிரமணிய ஸ்தலமாயிருக்கவேண்டும். பிறகு விஷ்ணு ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். நற்கீரர் பாடிய ஆறுபடை வீடுகளில் இது ஆருவது ஆகக் கூறப்பட்டிருக் கிறது. பழம்+உதிர்+சோலை=பழமுதிர் சோலையாம்,