பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


(8) சென்னபட்டணம் இதற்கு ஆங்கிலப் பெயர் மட்ராஸ் (Madras)ஆதியில் இதுமட்ராசஸ் படாம்(Madras Patam) என்றே. வழங்கப்பட்டது. இவ்வூர் ஆங்கிலேயரால் 1639 ஹ புதிதாய் உண் டாக்கப்பட்டதாம். இப்பெயர் வந்ததற்கு அநேகம் விடைகள் கொடுக்கப்பட்ட போதிலும். அவற்றுளெல்லாம், தற்காலம் பெரும் பாலும் அங்கீகரிக்கப்பட்டது, மதுரேசன் பட்டணம் என்பதுதான். மதுரை நாயக்கன் அல்லது மதுரேச நாயக்கன் என்ருெரு விஜய நகரத் தலைவன் பெயரால் இது வழங்கலாயிற்று என்பதே. இவ் ஆரைச் சாதாரணமாக மெட்ராஸ் என்று அழைத்த போதிலும், தமிழர் கள் இதை சென்னபட்டணம் என்றே அழைக்கின்றனர். இப்பெயர் வந்ததற்குக் காரணம் சென்னப்ப நாயக்கன் எனும் விஜயநகர சமஸ் தான அதிகாரி ஒருவன் பெயரினின்றும் வந்தது என்று ஒப்புக்கொள் ளப்படுகிறது. சென்னபட்டணம் என்பது குறுகி, சென்னை என்று வழங்கப்படுகிறது.


(9) பறங்கிமலை இது சென்னைக்கு 11 மைல் தூரமுள்ள ஓர் சிற்றுர். மலையின் தமிழ்ப் பெயர் பறங்கிமலை. பறங்கி என்பது பெரிங்கி (Feringhee) எனும் ஐரோப்பிய பதத்தின் மருவாம். அம்மலையில், அல்லது அம்மலையருகில் ழுற்காலத்தில் குடிபுகுந்த சில ஐரோப்பியர் கள் பெயரால் இது வழங்கலாயிற்று.


(10) பல்லாவரம் இது சென்னைக்கு 10 மைல் தூரமுள்ள ஓர் கிராமம். இதன் பூர்வீக பெயர் பல்லவபுரம். கி, பி. ஐந்தாம் நூற் ருண்டு முதல் சுமார் 300 வருடங்கள் வரையில், காஞ்சியை ராஜதானி யாகக் கொண்டு தமிழ்நாட்டில் பல்லவ அரசர்கள் ஆண்டது சரித்திர மூலமாக நாம் அறிந்த விஷயமாம். பல்லவர்கள் என்னும் பெயரினின் றும் பல்லவபுரம் வந்ததென்பதற்கு சந்தேகமில்லை. இங்கு பல்லவர் களால் வெட்டப்பட்ட ஒரு குகைக் கோயில் இருப்பது கவனிக்கத் தக்கது.


(11)ஸ்ரீபெரும்பூதூர் இதன் பழைய பெயர் பூதலூர். இங்குள்ள சில கல்வெட்டுகளில் இவ்வூர் பூதலூர் என்றே கூறப்பட்டிருக்கிறது. இங்கு புராதனமான சிவன் கோயில் ஒன்றிருக்கிறது, சிவஸ்தல மாயிருந்தபோது பூதலூர் எனும் பெயர் பெற்றிருந்தது; வைஷ்ணவ ஆசாரியராகிய ராமானுஜர் காலத்தின்பின் வைஷ்ணவ ஸ்தலமாகி |ஸ்ரீபெரும்பூதுர் எனும் பெயர் பெற்றது.