பக்கம்:தமிழ் அமுதம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. நாட்டுவளம்

சங்க காலத்தில்

வடவேங்கடத்திலிருந்து குமரி முனைவரை பரவியுள்ள தமிழகத்தில் உள்ள மலைகள் எவை, அவை எங்கெங்கு இருக்கின்றன, அவற்றின் பெயர்கள் யாவை, அவற்றில் விளையும் பொருள்கள் எவை, தமிழகத்தில் பாயும் ஆறுகள் யாவை, அவை எங்குத் தோன்றி எவ்வெவ்வாறு பாய்கின்றன, அவற்றால் உண்டாகும் நலன்கள் யாவை, தமிழகத்தில் காடுகள் எங்கெங்கு இருக்கின்றன, காட்டில் வாழும் விலங்குகள் யாவை, அவற்றாலும் காடுகளாலும் மக்களுக்கு உண்டாகும் பலன்கள் யாவை, நாட்டில் நெல் விளையும் இடங்கள் எவை, பிற தானியங்கள் விளையும் இடங்கள் எவை, பண் படுத்தப்படாத இடங்கள் எவை, அவை அங்ஙனம் இருக்கக் காரணம் யாது என்பன போன்ற நாட்டுவளத்தை அறியத் தக்க செய்திகள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு சங்ககாலத் தமிழகத்தில் செய்யப்பட்டு வந்த கைத்தொழில்கள் யாவை என்பதும் சங்க நூல்களில் ஆங்காங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இங்ஙனமே பழங்காலத் தமிழகத்து உள் நாட்டு வாணிகம், கடல் வாணிகம் என்பன பற்றிய விவரங்களும் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. பழந்தமிழர் இந்நாட்டுப் பொருள்களைக் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பர்மா, மலேயா, கிழக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/11&oldid=1459114" இலிருந்து மீள்விக்கப்பட்டது