பக்கம்:தமிழ் அமுதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. பிள்ளை வளர்ப்பு

முன்னுரை

"நூலைப்போல் சீலை, தாயைப்போல் பிள்ளை” என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. நூல் முருடாக இருப்பின் அதனால் நெய்யப்படும் ஆடையும் முருடாகவே இருக்கும். நூல் மென்மையாக இருப்பின், ஆடையும் மென்மையாக அமையும். கடையில் ஆடையைப் பார்க்கும் நாம், அதற்குரிய நூலின் எண் என்ன என்று கேட்கின்றாேம் அல்லவா ? ஆடையைக் கொண்டு நூலை விசாரித்து அறிவதுபோல, நாம் பிள்ளைகளின் செயல்களைக் கொண்டு பெற்றாேரை அறிகின்றாேம்.

நூலுக்கு ஏற்ப ஆடை அமையும் ; இதை மாற்ற இயலாது. ஆனால், பெற்றாேர் நிலைக்கு ஏற்பப் பிள்ளைகள் வளர்ந்தாலும், அவர்களை நல்லவர்கள் ஆக்கவும், கெட்டவர்கள் ஆக்கவும் அப்பெற்றேர்களின் பண்புகளோடு சூழ்நிலையும் சேர்ந்து கொள்கிறது. ஆடை அமைப்பில் நூலே சிறப்பிடம் பெறுகிறது. பிள்ளை வளர்ப்பில் பெற்றாேர் இயல்புகளும் சூழ்நிலையும் சிறப்பிடம் பெறுகின்றன.

பலவகைப் பெற்றாேர்

தாயும் படித்தவள்; தந்தையும் படித்தவர். அந்த இருவரும் மனமொத்த அன்பு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வீட்டில் நல்ல புத்தகங்கள் நிறைந்திருக்-

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/20&oldid=1459133" இலிருந்து மீள்விக்கப்பட்டது