பக்கம்:தமிழ் அமுதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

சமயம் பற்றிய உண்மைகளே நமக்குத் தேவை” என்று கூறிக் கிளர்ச்சி செய்தனர். அதன் பயனாகவும் பிற காரணங்களாலும் பள்ளிகளில் சமய போதனை கைவிடப்பட்டது.

சமயம் என்றவுடன் இந்துக்கள் உள்ளத்தில் இராமாயண பாரதக் கதைகள்தாம் நினைவுக்கு வருகின்றன. 'இக்கதைகள் உண்மைச் சமயத்தை வளர்க்கத் தக்கவையா? உண்மைச் சமயம் என்பது யாது? அச் சமயக் கொள்கைகள் யாவை? அவற்றிற்கும் இக்கதைகளுக்கும் என்ன தொடர்பு உண்டு?' என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணவேண்டுமல்லவா? இக்கதைகள், இந்துக்களிடையே பலருக்குப் பொருத்தமாகக் காணப்படவில்லை. பிறசமய மாணவரும் இவற்றை விரும்பிப் படிப்பது அரிது. இக்கதைகள் பல நூற்றாண்டுகட்கு முன் இருந்த சூழ்நிலைக்கு ஏற்ப எழுந்தவை. இக்கதைகள் நம் நாட்டின் பண்டைய நிலையை விளக்குவன என்ற அளவில் பயன்படத் தக்கவையே தவிர, இன்றைய வாழ்க்கையில் மிகுந்த பயனைத் தரத்தக்கன அல்ல. கடவுள் தொடர்பான கதைகளால் மனித முயற்சியிலும் உழைப்பிலும் பிள்ளைகட்கு நம்பிக்கை ஏற்படுவது அரிதாகும். இதனால் தன் முயற்சி தாழும்; உழைப்பில் ஊக்கம் செல்லாது.

"இராமாயண வரலாறு, வடநாட்டார் தென்னாட்டார் மீது ஆதிக்கம் கொண்டதை உணர்த்துவது,” என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களும் பண்டித நேரு போன்ற அரசியல் அறிஞர்களும் எழுதியும் பேசியும் வந்த காரணத்தால், இராமாயண வரலாறு பற்றித் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருந்து வருகின்றது. கற்றவரும் மற்றவரும் இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து வருகின்றனர். இராமாயணம், பாரதம் போன்ற வரலாறுகள் எவ்வாறோ, யாராலோ, எக்காலத்திலோ சமயத் தொடர்புடையன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/26&oldid=1459146" இலிருந்து மீள்விக்கப்பட்டது