பக்கம்:தமிழ் அமுதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பருவம் நீங்கிய பிறகு உளதாகும் வாழ்க்கைப் பருவத்தில் அவரவர் சமய நூல்களைப் படித்து மகிழ்ச்சி பெறட்டும் ; அதனால் உண்டாகும் பயனை அடையட்டும். சமயம் என்பது தனி மனிதன் உரிமை. அதனைத் தடுக்கவோ, கெடுக்கவோ பிற மனிதனுக்கு உரிமையில்லை.

முடிவுரை

உழைப்பால் உயர்வு பெற்ற பெரியோர், புதியன கண்ட பேரறிஞர்கள், தாய் நாட்டைக் காத்த வீரர்கள், பிறர்க்கே உழைத்த பெருமக்கள், சன்மார்க்கத்தில் வாழ்ந்த அருளாளர்கள் ஆகிய பெருமக்களுடைய விவரமான வாழ்க்கை வரலாறுகளும் அவர்தம் அருளுரைகளும் கொண்ட நூல்களே இக்கால மாணவர் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்து, அவர்களை உலகில் வாழ்வாங்கு வாழச்செய்ய வல்லவை. இவ் வரலாறுகள் ஒழுக்கத்தையும், சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. இவை வளர்க்கும் ஒழுக்க அறிவும், சமய அறிவும் மாணவ நிலைக்குப் போதுமானவை. அறிவிற் சிறந்த கல்வித் துறையினர் இத்துறையில் கவனஞ் செலுத்துதல் நலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/29&oldid=1459148" இலிருந்து மீள்விக்கப்பட்டது