பக்கம்:தமிழ் அமுதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. செளராஷ்டிரர்*

சொந்த நாடு

தமிழகத்தில் பெங்களூர், வடஆற்காடு, தஞ்சை மாவட்டம், மதுரை, இராமநாதபுர மாவட்டங்கள் இவற்றில் வாழ்ந்துவரும் செளராஷ்டிரர் கத்தியவார் என்று சொல்லப்படும் செளராஷ்டிர நாட்டைச் சேர்ந்தவர். இவர்களின் முன்னோர் கத்தியவாரில் பட்டுநூல் நெசவு செய்து வந்தவர்.

புதிய ஊர்

இவருள் ஒரு பகுதியினர் மேற்கு மாளுவ நாட்டில் உள்ள 'மந்தசோர்' என்னும் நகரத்திற்குக் குடியேறினர். கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரகுப்தன் என்ற குப்த மன்னன் விருப்பப்படி மேற்கு மாளுவ நாட்டிலுள்ள மந்தசோர் என்ற நகரத்தில் செளராஷ்டிரர் சிலர் குடியேறினர் என்று அந்நகரிலுள்ள கல்வெட்டுக்கள் கூறு கின்றன. இவர்தம் பட்டுநெசவு பற்றிய புகழ்மாலை இக் கல்வெட்டில் விரிவாகக் காணப்படுகிறது. மந்தசோர் நகரம் எழில் மிகுந்த மங்கையாகவும், செளராஷ்டிரர் அம்மங்கை அணியும் பட்டாடையாகவும் அக்கல்வெட்டில்


* தர்ஸ்ட்டன் எழுதிய ‘தென் இந்தியச் சாதிகளும் இனங்களும் ‘, ‘மதுரை மான்யுவல் ‘, ‘மதுரை கெசட்டியர்’ என்னும் நூல்களின் துணையைக் கொண்டு இஃது எழுதப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/30&oldid=1459149" இலிருந்து மீள்விக்கப்பட்டது