பக்கம்:தமிழ் அமுதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

திருமணத்தில் கேள்விகள்

இங்ஙனம் செளராஷ்டிரர் செளராஷ்டிர நாட்டிலிருந்து தேவகிரிக்கும், பின்னர் விசய நகரத்திற்கும், அதன் பின்னர் மதுரை முதலிய இடங்களுக்கும் வந்தவர் என்பதை, அவர்கள் திருமணச் சடங்குகளுக்குமுன் கூறி விடுகின்றனர். பெண் பேசப்போகும் மணமகன் வீட்டாரைப் பெண் வீட்டார், 'நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ?' என்று கேட்கின்றனர். மணமகன் வீட்டார், ‘ நாங்கள் சேரரத்தைச் சேர்ந்தவர். சேரரத்— செளராஷ்டிரா அல்லது கத்தியவாரின் பழைய பெயர்; தேவகிரியில் தங்கி வாழ்ந்தோம்; பின்னர் விசய நகரத்துக்கு வந்தோம்; அதன் பின்னரே மதுரை முதலிய இடங்களுக்கு வந்தோம்’ என்று விடை கூறுவர். இவ் விடைக்குப் பிறகு மணமகன் வீட்டார் பெண் வீட்டாரை முன் சொன்னபடியே கேட்பர். அவர்களும் மேற்சொன்ன வாறே விடையளிப்பர்.

பிற சான்றுகள்

கி. பி. 1872-இல் சேலத்தில் மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்ட கையெழுத்து நூலில் இதே வரலாறு கூறப்பட்டுள்ளது. விசய நகரப் பேரரசின் காலத்தில் அந்நகரம் பட்டாடைகளுக்குப் பெயர் பெற்றிருந்தது என்பது வரலாறு. தமிழகத்திலுள்ள செளராஷ்டிரர்களில் பலரும் இன்றளவும் நல்ல முறையில் தெலுங்கு பேசுவதைக் காணலாம். அவர்தம் மொழியில் தெலுங்குச் சொற்களும், கன்னடச் சொற்களும் காணப்படுகின்றன; பெல்லாரி மாவட்டத்திற்குச் சிறப்புடையதான பசவர் விருந்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இவை யனைத்தையும் நோக்க, செளராஷ்டிரர் நீண்ட காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/32&oldid=1459151" இலிருந்து மீள்விக்கப்பட்டது