பக்கம்:தமிழ் அமுதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தெலுங்கு நாட்டில் தங்கியிருந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

தமிழகத்தில் பல இடங்களில்

விசய நகர வீழ்ச்சிக்குப் பிறகு செளராஷ்டிரர்களில் ஒரு பகுதியினர் பெங்களூரில் குடியேறினர். அவர்கள் 'பட்வேகர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களால் நெய்யப்பட்ட பட்டாடைகள் ஹைதர் அலி காலத்தில் போற்றப்பட்டனவாம். ஹைதர் அலி தஞ்சை மாவட்டத்திலிருந்து 25 செளராஷ்டிரக் குடும்பங்களை மைசூர் நாட்டில் குடியேற்றினார் என்பதும், பூநீரங்கப் பட்டினத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பட்டுத் தொழில் வீழ்ச்சி யடைந்தது என்பதும் 1891-ஆம் ஆண்டில் வெளியான மைசூர் மக்கள் அறிக்கையில் காணப்படுகின்றன.

மதுரையில்

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தூண்டுதலால் செளராஷ்டிரர் மதுரையில் குடியேறினர் என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. மதுரையிலுள்ள செளராஷ்டிரர் உழைப்பும் திறமையும் மிக்கவர். பலர் செல்வராக இருக்கின்றனர்; தமிழ் நாட்டின் மற்ற மக்களிடமிருந்து விலகித் தனித்தே வாழ்கின்றனர்; வீட்டில் தங்கள் மொழியையே பேசுகின்றனர்; தங்கள் நாட்டின் பழக்க வழக்கங்களை இன்றளவும் கைக்கொண்டுள்ளனர். சிறிது வெள்ளை கலந்த மஞ்சள் நிறமுடைய இம்மக்கள் தமிழகத் தின் சில நகரங்களில் காணப்படுகின்றனர்.

கி. பி. 1705-இல் மங்கம்மாள் மதுரையை ஆண்டு வந்தாள். அப்பொழுது செளராஷ்டிரர் பிராமணர் முறையில் பூணுால் அணிதலை மேற்கொண்டனர். இது குற்ற மென்று கருதப்பட்டு 18 செளராஷ்டிரர் மதுரைக் கவர்ன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/33&oldid=1459152" இலிருந்து மீள்விக்கப்பட்டது