பக்கம்:தமிழ் அமுதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

“கலை” என்பது யாது ?

மனிதனது உள்ளத்தைத் தன்வயப்படுத்திப் பெருக்கெடுத்து வெளிப்படும் ஆற்றலே கலை என்பது. இந்த ஆற்றல் காவியமாகவும் ஒவியமாகவும் சிற்பமாகவும் எழில் மிகுந்த கட்டடமாகவும் வெளிப்படலாம். இவ்வாற்றல் இசையாகவும் வெளிப்படும்; இசைக்குரிய கருவிகளை ஆக்கவும் பயன்படும். இவ்வாற்றலே நடனக்கலையையும் நாடகக்கலையையும் தோற்றுவித்தது ; பேரெழில் மிகுந்த தாஜ்மஹால் கட்டடத்தையும், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் அஜந்தாச் சிற்பங்களையும் தோற்றுவித்தது. அபிநயத்தின் வாயிலாக உள் உணர்ச்சிகளைக் காட்ட வல்லதும் இவ்வாற்றலே. சுருங்கக் கூறின், கலை என்பது கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை என்னும் பல கலைகளுக்குப் பிறப்பிடமானது. இக்கலை உணர்ச்சி இல்லாதார் விலங்கு உணர்ச்சி உடையவரேயாவர்; மனிதப் பண்பு அற்றவரே யாவர்.

கட்டடக் கலை

ஒரு நாட்டு மக்களது உயரிய நாகரிகத்கை உணர்த்தி நிற்பவற்றுள் கட்டடக்கலையும் ஒன்றாகும். பல்லவர் காலக் கட்டடக் கலையை அவர்கள் அமைத்த <b?குடைவரைக் கோவில்களிலிருந்தும் காஞ்சி கயிலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோவில்களிலிருந்தும் நன்கு அறியலாம். மலைச்சரிவினைக் குடைந்து தூண்களையும் மண்டபங்களையும் அமைத்தல் எளிதான செயலன்றே ! பாறையையே கோவிலாகக் குடைந்து அமைத்தலும் செயற்கரிய செயலன்றாே! கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுதலும் அறிய செயல்தானே ! திருச்சுற்றுச் சுவர் முழுதும் சிறு கோவில்களாக மாற்றிச்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/36&oldid=1459155" இலிருந்து மீள்விக்கப்பட்டது