பக்கம்:தமிழ் அமுதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

உள்ள ஏழடுக்கு அரண்மனை மகாராட்டிரர் காலத்துக் கட்டடக்கலை உயர்வை அறிவிப்பதாகும். ஆர்க்காடு முதலிய இடங்களில் உள்ள அழகிய மசூதிகள், கர்நாடக நவாப் காலத்திய கட்டடக்கலை உணர்வை உணர்த்துவனவாகும்.

சிற்பக்கலை

மனிதன் தான் காட்ட விரும்பும் பொருள்களின் உருவங்களை மரத்திலோ கல்லிலோ பிறவற்றிலோ அமைத்தல் சிற்பமாகும். இக்கலை கற்காலத்திலிருந்தே தோற்றமானது. இக் கலைஉணர்ச்சி படிப்படியாக வளர்ச்சிபெற்று வந்தது. இறந்த வீரனது உருவத்தைக் கல்லிற்பொறித்து அதனை நட்டு வழிபடுதல் பண்டையோர் வழக்கம். இது மிக்க விளக்கமாகத் தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றது. சேரன் செங்குட்டுவன் கன்னகியின் உருவத்தைச் செய்து கோவிலில் வைத்து வழிபட்டான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. பின்வந்த பல்லவர் காலத்தில் சிற்பக்கலை மிக உயர்ந்து காணப் பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள இரதங்களில் உள்ள உருவச் சிற்பங்களும் பாறைச் சிற்பங்களும் பல்லவர் காலத்தில் எழுந்த தமிழரது சிற்பக்கலைத்திறனை நன்கு காட்டவல்லன.

பின்வந்த சோழர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலிலும் கங்கைகொண்ட சோழேச்சரத்திலும் அமைந்துள்ள சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. ஏறத்தாழப் பதினான்கடி உயரமுள்ள வாயிற் காவலர் உருவச் சிற்பங்கள் வியத்தகு வேலைப்பாடு கொண்டவை. விசாரசர்மருக்கு உமா தேவியுடன் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் அவரது தலையில் கொன்றை மாலையைச் சூடி அவர்க்குச் சண்டீசப்பதம் அருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/38&oldid=1459157" இலிருந்து மீள்விக்கப்பட்டது