பக்கம்:தமிழ் அமுதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

வடநாட்டில் தோன்றித் தென்னகத்தில் பரவிய வைதிக சமயத்தார் இராமயண, பாரத நிகழ்ச்சிகளைப் பரப்பத் தமிழர் அறியலாயினர் : சமண, பெளத்த சமயங்களாலும் பல வரலாறுகளைத் தெரியலாயினர். இவற்றால் பல நூல்கள் தமிழில் தோன்றின. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த கோவலன்-கண்ணகி வரலாறே சிலப்பதிகாரம் என்ற முதல் தமிழ்க் காப்பியமாக உருவெடுத்தது. மாதவியின் மகளான மணிமேகலை பற்றிய வரலாறு மணிமேகலை என்னும் காவியமாக உருப்பெற்றது. இவ்விரண்டும் சங்ககால இறுதியில் செய்யப்பட்ட காவியங்கள். (ஒருவரைப் பற்றிய பெரிய வரலாறு — காவியம்.)

அகப்பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் பல்வேறு புலவர்கள் பல்வேறு கருத்துக்களில் பாடிய தனிப்பாடல்களின் தொகுதியே எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமாகும். எட்டுத் தொகுப்பு நூல்களே எட்டுத்தொகை என்பன. அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், பட்டினப்பாலே என்பன பத்துப் பாட்டு என்பவை.

எட்டுத்தொகையுள் புறநானூறு, பதிற்றுப்பத்து என்பன புறப்பொருள் பற்றியவை. பரிபாடல்-புறமும் அகமும் பற்றியது. ஏனைய ஐந்தும் அகப்பொருள் பற்றியவை. இப்பாடல்களால் தமிழர் மேற்கொண்டு வந்த அகப்பொருள் வாழ்க்கை முறையும் புறப்பொருள் வாழ்க்கை முறையும் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. தமிழர் ஒழுக்கத்தை விழுக்கலனாக்க கொண்டவர்—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/46&oldid=1459165" இலிருந்து மீள்விக்கப்பட்டது