பக்கம்:தமிழ் அமுதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

திருக்குறள் செய்யுள் வகையிலேயே மிகச் சிறியதான குறள் வெண்பாவினால் செய்யப்பட்டது ; அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பிரிவுகளை உடையது; 133 அதிகாரங்களைக் கொண்டது; 1330 குறட்பாக்களைக் கொண்டது ; இது ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகளிலும் வங்காளி முதலிய கீழ்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளமையே இதன் சிறப்பை இனிதுணர்த்தும். இது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் சிறப்பை நோக்கிப் பின்வந்த ஆசிரியர்கள் தம் நூல்களில் இதன் சீரிய கருத்துக்களையும் தொடர்களையும் பாக்களையும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் நூல்களில் திருக்குறள் ஒன்றே உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் அனைவர்க்கும் பொதுவான நெறிமுறைகளைக் கூறுவதால் இந்நூல் உலகத்தாரது பாராட்டுக்கு உரியதாக உள்ளது. இதனது இத்தகைய சிறப்பை நோக்கியே,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று பாரதியார் பாராட்டலாயினர்.

சிலப்பதிகாரம்

சோணாட்டுத் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிக மக்களான கோவலன், கண்ணகி என்பவர்களின் வரலாற்றைக் கூறும் பெரிய காவியமே சிலப்பதிகாரம் என்பது. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தனர்; ஒருவரை யொருவர் மணம்செய்துகொண்டனர்; சிறிது காலம் வாழ்ந்தனர் ; கோவலன் மாதவி என்னும் கணிகையின் கூட்டுறவால் தன் செல்வத்தை இழந்தான் ; பின்பு தன் அறியாமைக்கு இரங்கித் தான் பிறந்து வளர்ந்த நகரத்தி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/48&oldid=1459167" இலிருந்து மீள்விக்கப்பட்டது