பக்கம்:தமிழ் அமுதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

லிருக்க நாணங்கொண்டு, கண்ணகியின் சிலம்பை விற்று, வரும் பணத்தை முதலாக வைத்துப் பாண்டியன் தலை நகரான மதுரையில் வாணிகம் செய்து பிழைக்க விரும்பினான்; அவன் விருப்பத்தின்படி அவன் மனைவியும் உடன் சென்றாள். இச்செய்தியைக் கூறும் பகுதி சிலப் பதிகாரக் காவியத்தில் புகார்க்காண்டம் என்று சொல்லப்படும்.

கோவலனும் கண்ணகியும் நெடுந்தொலைவு நடந்து மதுரையை அடைந்தனர்; கவுந்தியடிகள் என்னும் தவ மூதாட்டியும் அவர்களோடு வழிநடந்தாள் ; அவள் உதவியால் கோவலனும் கண்ணகியும் மதுரை இடைப் பாடியில் மாதரி வீட்டில் தங்கினர் ; கோவலன் தன் ஒழுக்கக் கோட்டை நினைந்து வருந்தினான் , கண்ணகியின் அடக்கம், பொறுமை முதலிய நற்பண்புகளைப் பாராட்டினான் அவளிடம் விடைபெற்று அவள் தந்த சிலம்பை விற்கச் சென்றான் , அவ்வமயம் பாண்டிமாதேவியின் ஒரு சிலம்பை அரண்மனைப் பொற் கொல்லன் கவர்ந்து கொண்டு அது காணாமற் போய்விட்டது என்று கதை கட்டி விட்டான்; அவன் கோவலன் கொணர்ந்த சிலம்பைக் கண்டதும், அது காணாமற்போன மாதேவியின் சிலம்பு எனக்கூறி, அரசனை நம்பச் செய்து கோவலனைக் கொல்வித்தான் ; இதனை அறிந்த கண்ணகி கடுஞ்சீற்றங் கொண்டு மதுரை நகரத்தெருக்களில் அழுது புலம்பினாள்; வெட்டுண்ட தன் கணவன் உடலைக் கண்டாள்; ஆவேசம் கொண்டாள் ; பாண்டியன் முன்சென்று தன் வழக்கை எடுத்துரைத்தாள் ; கோப்பெருந்தேவியின் காற்சிலம்பில் முத்துப்பரல்கள் இருந்தன ; கண்ணகியின் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் இருந்தன ; இவற்றைக் கண்ட பாண்டியன் கோவலனைக் கொல்வித்தது தவறு என்று உணர்ந்தான், உடனே மயக்கமுற்று வீழ்ந்து இறந்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/49&oldid=1459168" இலிருந்து மீள்விக்கப்பட்டது