பக்கம்:தமிழ் அமுதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

னார் உடனிருந்தார். அவர் கண்ணகி வரலாற்றைச் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகட்கும் விளக்கமாகக் கூறினார். அதன்பிறகே செங்குட்டுவன் வடநாடுசென்று கல்லைக் கொண்டுவந்து கண்ணகியின் உருவம் பொறித்துக்கோவில் எடுப்பித்தான். இளங்கோவடிகள் கோவலன், கண்ணகி வரலாற்றைச் சிலப்பதிகாரம் என்ற காவியமாகப் பாடினார். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைச் சாத்தனார் மணிமேகலை என்ற பெயரில் முப்பது காதைகளைக் கொண்ட பெருங் காவியமாகப் பாடினார்.

கோவலன் இறந்த செய்திகேட்ட மாதவி தன் மகளான மணிமேகலையை ஆடல், பாடல்களில் விடாமல் பெளத்த முனிவர் தொடர்பில் — தவநெறியில் விடத் துணிந்தாள். மாதவியின் தாய் அவளைப் பொதுமகளாக்க விரும்பித் தோற்றாள். நாடாண்ட சோழன் மகனான உதயகுமாரன் மணிமேகலையைத் தனக்கு உரியவளாக்க முனைந்தான் இறுதியில் வெட்டுண்டு இறந்தான். மணிமேகலா தெய்வத்தின் உதவியால் மணிமேகலை மூன்று மந்திரங்களை அறிந்தாள் ; அவற்றின் உதவியால் வேண்டியபோது உருமாறினாள் விண்ணிற் பறந்து சென்றாள்; எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அவள் ஏழைகளுக்கும் பிற உயிர்களுக்கும் அன்னதானம் செய்தாள் ; சாவகம், மணிபல்லவம் முதலிய கடல்கடந்த இடங்களுக்கும் பறந்து சென்றாள் ; வஞ்சிமாநகரம் சென்று அங்கு வழிபட்டுவந்த கண்ணகியின் உருவச்சிலையை வணங்கினாள் ; காஞ்சி சென்று பஞ்சத்தைப் போக்கினாள் ; சோழனிடம் கூறிச் சிறைச்சாலையை அறச்சாலை யாக்கினாள். இவ்வாறு பல நலங்களைச் செய்த மணிமேகலை, மத வாதிகள் பலரைச் சந்தித்து அவரவர் மதக் கொள்கை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/54&oldid=1459173" இலிருந்து மீள்விக்கப்பட்டது