பக்கம்:தமிழ் அமுதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

பெருங்கதை

இது கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் எழுந்தது என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இதுவும் அகவற்பாவால் இயன்றது; உதயணன் என்ற வடநாட்டு மன்னன் வரலாற்றைக் கூறுவது. இதனை இயற்றியவர் கொங்கு வேளிர் என்பவர் (கொங்கு நாட்டுச் சிற்றரசர்). இதன் தமிழ்நடை எளிமையும் இனிமையும் கொண்டது. அக்கால அணி வகைகள், பலவகை மாலைகளைத் தொடுக்கும் முறை, நாவிதன் எவ்வாறிருந்து கூடிவரம் செய்ய வேண்டும் என்பதுபற்றிய விவரங்கள் முதலியவை இந்நூலுள் கூறப்பட்டுள்ளன.

சைவத் திருமுறைகள் : கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சம்பந்தர், திருநாவுக்கரசர் என்பவராலும், கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் சுந்தரர் என்பவராலும் பாடப்பட்ட பாக்களின் தொகுதியே தேவாரம் என்பது. ஒவ்வொரு திருமுறையும் பல பதிகங்களைக் கொண்டது. ஒவ்வொரு பதிகமும் பத்து அல்லது பதினைந்து பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பதிகமும் ஒரு தலத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியது. ஒவ்வொரு பதிதத்திலும் அத்தலத்தைப் பற்றிய இயற்கை அழகு, சிவபெருமானுடைய வீரச் செயல்கள், அத்தலத்தில் நிகழ்ந்த சமயத் தொடர்பான அற்புத நிகழ்ச்சிகள், சமணரையும் பெளத்தரையும் இழித்துரைத்தல், இராவணன் கயிலையைப் பெயர்த்த செய்தி என்பவை இடம் பெற்றிருக்கும்.

பல்லவர் காலமாகிய கி. பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்து ஊர்களைப்பற்றிய விவரங்கள், அவ்வூர்கள் இருந்த நாடுகளைப்பற்றிய விவரங்கள், அரசியல் செய்திகள் சில (போர்ச் செய்திகள் உள்பட), சைவத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/56&oldid=1459175" இலிருந்து மீள்விக்கப்பட்டது