பக்கம்:தமிழ் அமுதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பெருமை, மக்களுக்குரிய அறிவுரை என்பன போன்ற செய்திகள் மூவர் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளன. இசையைப்பற்றிய விவரங்கள், இசைவாணர் இருந்தமை, பலவகை இசைக் கருவிகளின் பெயர்கள், பண்களின் (இராகங்களின்) பெயர்கள், நடனம் பற்றிய குறிப்புக்கள் இன்ன பிறவும் ஆங்காங்குக் குறிக்கப்பட்டுள்ளன. நாயன்மார் காலத்தில் ஏறத்தாழ நானூறு ஊர்களில் சிவன் கோவில்கள் இருந்தன — அவற்றில் பூசையும் விழாக்களும் நடைபெற்று வந்தன — அவற்றுள் தில்லையும் திருவாரூரும் மிகச் சிறந்திருந்தன என்ற செய்திகளும் தேவாரத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

வடமொழியாளர் கூட்டுறவால் தமிழ்ச் செய்யுட்களில் புதியவை புகுந்தன. அவற்றுள், தாண்டகம், விருத்தம் முதலியன குறிப்பிடத்தக்கவை, இப் புதிய பாவினங்கள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளன. வடமொழிச் சொற்களும் முன் இலக்கியங்களில் கலந்த அளவைவிடச் சிறிது மிகுதியாகத் தேவாரத்தில் கலந்துள்ளன.

திருவாசகம் திருக்கோவையார்

இவை யிரண்டும் எட்டாம் திருமுறை எனப்படும். இவற்றைப் பாடியவர் மாணிக்கவாசகர். இவர் காலம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய திருவாசகம் இவரது பக்தி அநுபவத்தைப் படம் பிடித்துக் காட்டுவது. இதன்கண் தேவாரத்தில் காணப்படாத சில தலங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவ்வாறே பல புதிய பாடல் வகைகளும் இடம்பெற்றுள்ளன. பெண்கள் பூக்களைப் பறித்துக்கொண்டே சிவபெருமானைப் பற்றிப் பாடுவது போலவும், வாசனைப் பொடியை இடித்துக் கொண்டே பாடுவதுபோலவும், ஊசல், அம்மானை முதலிய ஆட்டங்கள் ஆடிக்கொண்டே இறைவனைப்பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/57&oldid=1459176" இலிருந்து மீள்விக்கப்பட்டது