பக்கம்:தமிழ் அமுதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பட்டினத்தடிகள், கி. பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்ற பெருமக்கள் பாடிய பாடல்களின் தொகுதியே பதினோராம் திருமுறை எனப்படும். பல தலங்களைப்பற்றிய செய்திகள், விரிவான முறையில் அப்பர் வரலாறு, சம்பந்தர் வரலாறு, வேறுசில நாயன்மார்பற்றிய செய்திகள் இதன்கண் இடம்பெற்றுள்ளன, அந்தாதி, இரட்டை மணிமாலை முதலிய பிரபந்த வகைகள் (சிறுநூல் வகைகள்) இதில் காணப் படுகின்றன.

பன்னிரண்டாம் திருமுறை : இதுதான் பெரிய புராணம் என்பது. இது 63 நாயன்மார் வரலாறுகளைக் கூறுவது. நாலாயிரத்துக்கு மேற்பட்ட விருத்தங்களை உடையது. இந்நூல் நடை மிகவும் தெளிவானது : மிகவும் எளிமையானது; இதனைக் கொண்டு சைவசமயத்தைப்பற்றிய செய்திகளையும் சைவசித்தாந்தக் கருத்துக் களையும் பல தலங்களைப்பற்றிய விவரங்களையும் நாயன்மார், வரலாறுகளையும் பல கலைகளைப்பற்றிய விவரங்களையும், போர், அரசாட்சி, இல்வாழ்க்கை, ஒழுக்கம் பற்றிய செய்திகளையும் நன்கு அறியலாம். இதனைப் பாடிய சேக்கிழார் கி. பி. 12-ஆம் நூற்றாண்டினர்; இரண்டாம் குலோத்துங்கனிடம் முதலமைச்சராக இருந்தவர்.

பாரத வெண்பா : இது மூன்றாம் நந்திவர்மன் காலத்தது; எளிய நடையில் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது ; புலமைநயம் மிக்கதன்று.

நந்திக் கலம்பகம் : இது மூன்றாம் நந்திவர்ம பல்லவனைப் பற்றியது. இன்றுள்ள கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது. நந்திவர்மன் செய்த போர்கள், அவனது தமிழறிவு, கொடைச் சிறப்பு என்பனபற்றிய செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/59&oldid=1459178" இலிருந்து மீள்விக்கப்பட்டது