பக்கம்:தமிழ் அமுதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘ குந்தவ்வை’ என்னும் பெயர்

“ அவ்வை " என்னும் சொல் தாய், தவம் செய்யும் பெண், கிழவி என்னும் பொருள்களைத் தருவதாக நூல்கள் கூறும். 'அவ்வா' எ ன் னு ம் சொல் கன்னடத்தில் 'அம்மை ‘ என்னும் பொருளில்நாம் ‘அம்மா’ எனப் பெண்களை அழைத்தற் பொருளில் வருகிறது. அதே சொல் தெலுங்கில் இன்று ‘பாட்டி ‘ என்னும் பொருளைத் தருகிறது. 'குந்தவ்வை’ என்னும் சொல் 'வள்ளி யம்மை’, ‘முருகம்மை' என்பன போலக் குந்த அவ்வை என இரு சொற்களால் ஆகிய தொடர். இப் பெயர் முதலாம் இராசராச சோழனது (கி. பி. 985 1014) தமக்கைக்கு வழங்கியதாகக் கல்வெட்டுக்களால் அறியலாம். இதற்கு முன் இப்பெயர், தமிழ் இலக்கியங்களிலோ கல்வெட்டுக்களிலோ காணுமாறில்லை. எனவே, இப்பெயர் வழக்குத் தமிழகத்திற்கு எங்கிருந்து வந்தது என்பதைத் தமிழராகிய நாம் அறிய அவாவுதல் இயல்பேயன்றாே?

சோழர் - இராட்டிரகூடர் உறவு

கி. பி. 10ஆம் நூற்றண்டின் முற்பாதியில் சோழ அரசனாக இருந்த முதலாம் பராந்தகனது காலத்தில்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/6&oldid=1459107" இலிருந்து மீள்விக்கப்பட்டது