பக்கம்:தமிழ் அமுதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

யணம் பாடப்பட்டது. கம்பர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட செய்யுட்கள் பாடியுள்ளார். அவருடைய பாக்களில் சங்க நூற் கருத்துக்களும் பின்நூற் கருத்துக்களும் சொற்களும் சொற்றாெடர்களும் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணம் கம்பரது கவித்திறமையைக் காட்டுவது; அரசியல், சமுதாயம், நாட்டுவளம், பக்தி, ஒழுக்கம்பற்றிய அவர் கொண்டுள்ள கருத்துக்கள், அவரது ஆழ்ந்த உலக அநுபவம் இவற்றையெல்லாம் படம்பிடித்துக் காட்டுவது. ஒன்றை வருணித்துப் பாடுவதில் கம்பர் இணையற்றவர். அவரது வருணனைத் திறனைப் பூக்கொய் படலம், புனல் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், கார்காலப் படலம், நாட்டுப் படலம், நகரப்படலம் முதலியவற்றில் சிறக்கக் காணலாம். அவரது காலத்துச் சோழநாட்டு வளத்தையும் சோணாட்டு மக்கள் வாழ்ந்த வளமான வாழ்க்கையையும் நாட்டுப் படலத்திலும் நகரப் படலத்திலும் உண்டாட்டுப் படலத்திலும் பார்க்கலாம். கம்பரது கவித் திறமைக்காகவே வைணவ நூலாகிய இராமாயணத்தைச் சைவரும் பிற சமயத்தாரும் விரும்பிப் படிக்கின்றனர்.

சைவசித்தாந்த நூல்கள்

திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞான போதம் முதலிய பதினான்கு நூல்கள் சைவசித்தாந்த சாத்திரங்கள் எனப்படும். அவற்றில் உயிர் பசு என்றும் கடவுள் பதி என்றும் மாயை பாசம் என்றும் சொல்லப்படும். பசுவாகிய உயிர் பாசம் என்னும் மாயையைக் கடந்து பதி என்னும் இறைவனை அடையும் வழியைக் கூறுவதே இச் சாத்திரங்களின் குறிக்கோள். இதனைப் பல மேற்கோள் கொண்டும் தெளிவாக இந்த நூல்கள் விளக்குகின்றன. இவற்றுள் தலை சிறந்தது சிவஞான-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/61&oldid=1459180" இலிருந்து மீள்விக்கப்பட்டது