பக்கம்:தமிழ் அமுதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

செய்தித் தாள்கள்

தமிழில் நாள் வெளியீடுகள், வார வெளியீடுகள், திங்கள் வெளியீடுகள் எனப்பல வெளியீடுகள் வெளி வருகின்றன. பெரும்பாலான தாள்களில் நல்ல தமிழ் நடை எழுதப்படுகிறது. அவற்றில் சிறுகதை, கவிதை, தொடர்கதை, ஆராய்ச்சிக் கட்டுரையைப் போன்ற பல் பொருள் கட்டுரைகள் என்பன வெளிவருகின்றன. தமிழ்நாட்டு வானொலி நிலையங்கள் அறிஞர் பேச்சுக்களை வெளியிடுகின்றன. வானொலி இலக்கியம் சிறந்த அறிவைத் தருவதாகும். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு களாக வளர்ச்சிபெறாமல் இருந்த தமிழ் உரைநடை இந்த 20-ஆம் நூற்றாண்டில் வியத்தகு முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. விஞ்ஞான நூல்களும் மேனாட்டுக் கலையும் தொழிலும்பற்றிய நூல்களும் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டைப் பற்றியே பேசிவந்த பண்டைய இலக்கிய நிலை மாறி விட்டது. இன்றைய இலக்கிய நூல்கள் உலகநாடுகளைப் பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் எளிதில் நாம் அறி யத்தகு முறையில் வெளிவந்திருக்கின்றன; இனியும் தொடர்ந்து வெளிவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/66&oldid=1459185" இலிருந்து மீள்விக்கப்பட்டது