பக்கம்:தமிழ் அமுதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

யிடையே பல படிப்பினைகளைச் செருகி அழகுபெற அமைப்பது காவியம் எனப்படும். இதுவே சங்ககாலக் காவியத்தின் இலக்கணம்.

கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் தண்டியலங்காரம் என்ற ஓர் அணி இலக்கண நூல் தமிழில் வெளியிடப்பட்டது. அது வடமொழியில் எழுதப்பெற்ற 'காவியா தர்சம்' என்னும் அலங்கார நூலின் மொழிபெயர்ப்பு. அதில் 36 பொருளணிகளும் பல சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வோர் அணிக்கும் பல உட்பிரிவுகள் உண்டு. தொல்காப்பியர் உவமையையே சிறப்பணியாகக் கொண்டார்; அதற்கென்று ஓர் இயலையும் வகுத்தார். ஆனால், காலப்போக்கில் வடமொழியாளர் தொடர்பால் அணிகள் பெருத்துவிட்டன.

'தண்டியவங்கா'ரத்தில் காவியம் — பெருங்காவியம், சிறு காவியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி பெருங்காவியத்தின் இலக்கணம் பின்வருமாறு :

வாழ்த்து, வணக்கம், எடுத்துக்கொண்ட பொருள் என்னும் மூன்றில் ஒன்றைப் பாயிரம் பெற்றிருத்தல் வேண்டும்; நாற்பொருள்களையும் பயக்கும் நீதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்; தன்னிகரில்லாத் தலைவனைப் பெற்றிருத்தல் வேண்டும்; மலை, ஆறு, கடல், நாடு, நகரம், பருவங்கள், சூரியன் தோற்றம், சந்திரன் தோற்றம் என்பவற்றையும் இவைபோன்ற பிறவற்றையும் வருணித்தல் உடையதாக இருத்தல் வேண்டும்; திருமணம், முடிசூட்டு, பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு, உண்டாட்டு, புதல்வரைப் பெறுதல், கலவியிற் களித்தல், புலவியிற் புலத்தல் என்பவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும்; மந்திரம் (யோசனை), தூது, மேற் செலவு (படையெழுச்சி), போர் புரிதல், வெற்றிபெறுதல் என்பவற்றை வருணித்தல் உடையதாய் இருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/70&oldid=1459189" இலிருந்து மீள்விக்கப்பட்டது