பக்கம்:தமிழ் அமுதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சமய விரிவுரை நூல்களால் அறியப்படுவன

ஆழ்வார்கள் அருளிச் செய்த அருட்பாடல்களுக்குப் பின்வந்த வைணவப் பெரியார்கள் விரிவான உரை வகுத்தனர். அவர்கள் வடமொழியிற் பெரும் புலவர்கள் ஆனதால் அவர்தம் விரிவுரைகளில் வடமொழி பாதிளவும் தமிழ்மொழி பாதியளவும் அமைந்து விட்டன. எனவே அவர்களது நடை ‘மணிப்பிரவாள நடை’ எனப்பட்டது. அவர்களது விரிவுரை தமிழ்மட்டும் படித்தவரால் படிக்கக்கூடவில்லை அதனாற்றான் படித்த புலவர்களுக்கும் அவ்விரிவுரைகளின் அருமையும் பெருமையும் தெரியாத நிலையில் அமைந்துவிட்டன.

அவ்விரிவுரை அக்காலத்தில் நிலவியிருந்த வைணவ சமய நடைமுறைகளையும் அச்சமயத்தார் கையாண்டு வந்த பழக்க வழக்கங்களையும் நன்கு தெரிவிக்கின்றன. உரையாசிரியர்கள் உலகியல் அறிவு மிக்கவர்கள். ஆதலால் உலகியல் செய்திகளையே உவமைகளாகக் கூறிப் பொருள்களை விளக்கியுள்ளனர். இறந்த பசுக் கன்றின் தோலைப் பிரித்து எடுத்து அதன்கண் வைக்கோலைச் செருகிக் கன்றுபோல் அமைத்துத் தாய்ப்பசுவை ஏமாற்றிப் பால்கறக்கும் நிலைமை இன்று இருந்து வருகிறது. இதே நிலைமை உரையாசிரியர்கள் காலத்தும் இருந்தது என்பதை அவர்கள் உரை தெரிவிக்கின்றது. இவ்வுவமைகளால் அவர்கால மக்களுடைய பழக்க வழக்கங்களையும் பிறவற்றையும் நாம் அறிய வாய்ப்பு உண்டாகிறது. அரிய உரை எழுதிய அப்பெருமக்களின் சமயநூற் புலமையையும், பிறநூற் புலமையையும், உலகியல் அறிவையும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிவஞான போதத்திற்கு, விருத்தியாக 'சிவஞான சித்தியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/73&oldid=1459192" இலிருந்து மீள்விக்கப்பட்டது