பக்கம்:தமிழ் அமுதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

எழுதப்பட்டது. அதன்கண் காணப்படும் பல சமயங்களைப் பற்றிய விளக்கங்கள், பல சமயங்களைப் பற்றிய கொள்கைகளையும், ஒன்றுக்கொன்று அமைந்த வேறு பாடுகளையும் நாம் அறியத்துணை செய்கின்றன.

கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கெழுதியுள்ள பேருரை, அவரது சைவநூற் புலமையையும், பிற சமயநூற் புலமையையும், இலக்கிய இலக்கணப் புலமையையும் பறையறைந்து காட்டுகின்றன. தருக்கக்கலையில் அவருக்கிருந்த பேராற்றலையும் அப்பேருரை விளக்கி நிற்கின்றது, சமயத்தின் மூலக்கொள்கைகள் எவை, அவற்றை எவ்வாறு தக்க சான்று காட்டி நிறுவுவது அல்லது மறுப்பது என்பன போன்ற விவரங்களை இப்பேருரை கொண்டு நன்கு தெளியலாம்.

சிறுநூல்களால் அறியப்படுவன

வடமொழியாளர் சிறுநூல்களைப் 'பிரபந்தங்கள்’ என்பர் ; அவை 96 வகை என்பர். அம்மானை, உலர, கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, இரட்டை மணி மாலை, நான்மணிமாலை, பன்மணிமாலை, பரணி, மடல் முதலியன சிறுநூல்களிற் சிலவகைகளாகும்.

உலா, பரணி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் என்பன இறைவனைப் பற்றியும் அரசனைப் பற்றியும் பெருமக்களைப் பற்றியும் எழுவன. மற்றவை சமயத்தொடர்பாலும் பல்வேறு பொருள்பற்றியும் தோன்றுபவை. இவற்றைப் படிப்பதால் அவவக்கால அரசர்களைப் பற்றிய விவரங்களை (போர்ச் செயல்கள், உடைச்சிறப்பு, அணிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, பிற பண்புகள் முதலிய பலவற்றை) அறியலாம். இவை வரலாற்றிற்குத் துணை செய்யும். பல தலங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம். அடி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/74&oldid=1459193" இலிருந்து மீள்விக்கப்பட்டது