பக்கம்:தமிழ் அமுதம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

யார்களைப் பற்றிய செய்திகள், பொதுமக்களைப் பற்றிய செய்திகள், மதங்கியார், பிச்சியார், கொற்றியார், களிமகன், மறவர் போன்ற மக்களைப் பற்றிய விவரங்கள் இன்ன பிறவும் ஒரளவு அறியலாம். உலாநூல்களில் ஏழு பருவப் பெண்களைப் பற்றிய குணம், குறி, செயல்கள் விவரமவாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு, ஒவ்வொரு சிறு நூலிலும் நாம் அறியத்தகும் செய்திகள் பலவண்டு. ‘சிறுதுரும்பும் பல்குத்த உதவும்' என்பது போல, இச்சிறு நூல்களும் அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, சமய வரலாறு, மக்களுடைய பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாடு முதலியவற்றை அறியத் தம்மால் இயன்ற அளவு துணை செய்கின்றன.

தல புராணங்களால் அறியப்படுவன

1. ஒவ்வொரு தலபுராணத்திலும் நாட்டுப் படலம் நகரப்படலம் என்பன அமைந்திருக்கின்றன. அவற்றைக்கொண்டு அப்புராணம் எழுந்த நூற்றாண்டில் இருந்த நாட்டு அமைப்பினையும் நகர அமைப்பினையும் நன்கு அறியலாம். இந்த முறையில் புராணங்களைத் தவிர வேறு இலக்கியம் இந்த அளவு உதவி செய்தல் இயலாது.

2. மருத்துவம், வானநூற்கலை, இசைக்கலை, பற்றிய செய்திகளை அறியலாம்.

3. நூல் எழுந்த காலத்தில் நடைமுறையிலிருந்த அணிவகைகள், உடைவகைகள், ஒப்பனை முதலியவை பற்றிய விவரங்களை உணரலாம்.

4. நூல் எழுந்த காலத்துத் தமிழ்ச் செய்யுள் நடை, வழக்கிலிருந்த சொற்கள், அணி வகைகள் முதலியவற்றை அறியலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/75&oldid=1459194" இலிருந்து மீள்விக்கப்பட்டது