பக்கம்:தமிழ் அமுதம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

5. வழிபாட்டு முறைகள், சமயநிலை, சமயக்கொள்கைகள், சமய வழக்காறுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

6. நாட்டுப் படலம் நகரப்படம் இவற்றைக் கொண்டு நாட்டு மக்களுடைய தொழில் முறைகளையும் ஒரளவு அறியலாம்.

கதை நூல்களால் அறியப்படுவன

புனைந்துரை, ஒரளவு வரலாறு, கடன் பெற்ற கதைகள் எனக் கதை நூல்கள் பலதிறப்படும். இவை பெரும்பாலும் புனைந்துரை நூல்களே. இவை மக்கள் உணர்ச்சிகளையும்செயல்களையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுவன. மனிதரிடம் காணப்படும் நற்பண்புகளால் நடைபெறும் நற்செயல்களும், தீய பண்புகளால் நடைபெறும் கீழ்த்தரச் செயல்களும் இவற்றில் படம் பிடித்துக் காட்டப்படும். மனித உணர்ச்சிகளைப் பயன் படுத்த வேண்டும் என்னும் நல்லெண்ணத்தினால் இவை எழுதப்படுபவை.

வரலாற்றுக் கதைகளில் வரலாற்றுத் தொடர்பான இடங்கள்பற்றிய விவரங்களும் இடையிடையே வரும். இவையெல்லாம் மனித உணர்ச்சிக்கு இன்பமூட்ட வல்லவை.

சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்திச் சுருங்கக் கூறுவது ஆயினும் படிப்பினை உடையவை. இத்தகைய சிறுகதை பெருங்கதைகளைப்படிப்பதால் மனித உள்ளம் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கின்றது. சிறந்த தமிழறிஞர் மு. வ.-வின் நடையும் நமக்குப் பயன்படும்.

கட்டுரை நூல்களால் அறியப்படுவன

வருணனை, அறிவியல், இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம், கலைகள் முதலிய பல பொருள்களைப் பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/76&oldid=1459195" இலிருந்து மீள்விக்கப்பட்டது