பக்கம்:தமிழ் அமுதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கட்டுரைகள் தோன்றும். இவை பலதுறை அறிவை ஊட்டவல்லவை. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவுசெறிந்த நிலையில் படிப்போர்க்குப் பயன்படும். பொதுவாகக் கட்டுரை நூல்களை மிகுதியாகப் படிப்பது அறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும்.

இலக்கண நூல்களால் அறியப்படுவன

பிற மொழிகளில் இலக்கணம் என்பது எழுத்தையும் சொல்லையும் பற்றியது. ஆனால், தமிழ் மொழியில் இலக் கணம் என்பது எழுத்து, சொல், பொருள் என்னும் முன்றைப் பற்றியது. வாழப் பிறந்த மனிதன் தன் கருத்துக்களைப் பிறருக்கு வெளியிடக் கடமைப்பட்டவன். அங்ஙனம் வெளியிட மொழி தேவைப்படுகிறது. மொழிக்குச் சொற்கள் தேவை. சொற்களுக்கு எழுத்துக்கள் தேவை. எனவே, மனிதனுக்கு எழுத்திலக்கணம், சொல் லிலக்கணம், அச் சொல் வெளிப்படுத்தும் பொருளிலக்கணம் ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. மக்களுடைய உச்சரிப்பால் காலப்போக்கில் குறித்த பொருளைத் தருவதாயும் சொல் வேறுபடுகிறது. அத்தகைய சொற்கள் எவை என்பதைச் சுட்டவேண்டியது இலக்கண ஆசிரியரின் கடமை. ஆதலின் உச்சரிப்பு வேறுபாட்டால் சில சொற்களிலுள்ள எழுத்துக்களுக்குப் பதில் வேறு எழுத்துக்கள் இடம் பெறுதலும் உண்டு. (காட்டாக, சாம்பல் — சாம்பர்.) இத்தகைய மாற்றங்களையும் ஆசிரியன் கூறக் கடமைப்பட்டவன். சொற்கள் ஒரு காலத்தில் வழக்கிலிருந்து பிற்பட்ட காலங்களில் வழக்கொழிந்து போகும். அவை வழக்கில் இருந்தபோது எழுதப்பட்ட இலக்கியங்களில் அவை இடம் பெற்றிருக்கும். அவை வழக்கு வீழ்ந்தகால மக்கள் அவ்விலக்கியங்களைப் படிக்கும்போது சொற்பொருள் தெரியாமல் இடர்ப்படுவர். எனவே, அவ்ற்றைக் குறிக்க வேண்டுவது இலக்கண ஆசிரியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/77&oldid=1459196" இலிருந்து மீள்விக்கப்பட்டது