பக்கம்:தமிழ் அமுதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழனான அரிஞ்சயனுக்கும் சாளுக்கியன் மகளான குந்தவ்வைக்கும் பிறந்தவனே இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழன்.

சுந்தர சோழனுக்கு இரண்டாம் ஆதித்தன், அருள் மொழித்தேவன் என்ற முதலாம் இராசராசன் ஆகிய மைந்தர் இருவரும் ஒரு பெண்ணும் பிறந்தனர். இப்பெண்ணுக்குக் குந்தவ்வை என்று (பாட்டியின்) பெயரிட்டனர். இராசராசனுக்கு இராசேந்திரன் என்ற மகனும் ஒரு பெண்ணும் பிறந்தனர். இராசராசன் தன் பாட்டியின் பெயரைத் தன் செல்வ மகளுக்கு இட்டுக் குந்தவ்வை என்று அழைத்தான்; அ ப் பா ட் டி யி ன் தமையனான தானார்ணவனது இரண்டாம் மகனான விமலாதித்தனுக்குத் தன் மகளை மணம் செய்வித்தான்.

இந்தச் சோழர்-சாளுக்கியரது உறவின் முறையால்தான் 'குந்தவ்வை’ என்னும் பெயர் தமிழரசன் மகளுக்குப் பெயராக அமைந்தது, தமிழ்க் கல்வெட்டுக்களில் இடம் பெற்றது என்பது கீழைச் சாளுக்கியர் வரலாற்றால் இனிதுணரப்படும்.

குந்தவ்வை - பெயர்க் காரணம்

கீழைச்சாளுக்கியர், மேலைச் சாளுக்கியராகிய கன்னடர்க்கு உறவினர். மேலைச் சாளுக்கியர் நீண்ட காலமாகவே சமணப் பற்றுடையவர். சமணத்தில் குந்தகுந்தாசாரியார் என்ற சிறந்த ஆசாரியார் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த கல்விமான் ; பெரிய சமயப் பிரசாரகர். அப்பெரியார் நினைவாக ஆடவரும் பெண்டிரும் பெயர் வைத்துக் கொள்ளல் இயல்பேயன்றாே ? சமயகுரவர், போற்றத்தக்க பிற பெரியார்கள், அரசர்கள் இவர்தம் பெயர்களை மக்கள் வைத்துக்கொள்ளல் யாண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/8&oldid=1459106" இலிருந்து மீள்விக்கப்பட்டது